இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85 “ ஒத்தக்கால் மண்டபம் “ இது பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு அருகில் இருக்கு இதன் அர்த்தம் – இது சுழுமுனை நாடி குறிக்குது அது ஒற்றை கம்பம் ஆகையால் – அது தூண் மாதிரி சித்தரிக்கப்பட்டு – மண்டபம் ஆக்கி காட்டியிருக்கிறார் நம் மக்கள் ஆயிரங்கால் மண்டபம் மாதிரி ஒற்றைக்கால் மண்டபம் முன்னது மூளை குறிக்குது   வெங்கடேஷ்

  நிதர்சனம்

நிதர்சனம்   நல்ல நிலைக்கு அனுபவத்துக்கு வந்துவிட்ட சாதகன் அடிக்கடி நினைவு கூறும் வாசகம் “ எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் “ இது நகைச்சுவை  – வேடிக்கை  அன்று ஆனந்த மேலீட்டால் வரும் திருவாசகம் ஆம்   வெங்கடேஷ்  

  சித்தம் சிவமயம் ஆதல் எப்போது ??

சித்தம் சிவமயம் ஆதல் எப்போது ??   தவத்தால் சுழுமுனைக்கு ஏறினால் மனம் உலக வாதனை தவிர்க்கும் உலக விஷயத்தில் லயிக்காது உலக சிந்தனை மாறி சிவசிந்தனை – சிவமனனம் மட்டும் மேலோங்கி நிற்கும் அப்போது சித்தம் யாவும்  சிவமயம் ஆகும் அத்தனும் அங்கே அமர்வான்   வெங்கடேஷ்  

 திருவடி தவம் – கண்மணி தவம் அனுபவங்கள் – 5

திருவடி தவம் – கண்மணி தவம் அனுபவங்கள் – 5   1 பதஞ்சலி யோகத்தின் 7 ம் படியான “ தியானம் “ – எண்ணமிலா நிலை சித்திக்கும் மனனமிலா நிலை சித்திக்கும்   2 உருவம் எலாம் கரைந்து அருவ நிலை அனுபவம் சித்திக்கும் அப்போது மனதால் இயங்க முடியாது மனம் உருவம் பற்றித்தான் செயல்படும்   3 கண்மணி வல்லபத்தால் மனம் அடங்கிக் கொண்டே வரும்   வெங்கடேஷ்  

 தெளிவு 469

தெளிவு 469 பாம்பின் கால் பாம்பறியும் ஒரு பெண் மனதை மற்றொரு பெண்ணே அறிய முடியும் அவளுக்கே  ஆழம் தெரியும் அது போல் திருவடி பெருமையும் – கண்மணி பெருமையும் தவம் ஆற்றுவோரே அறிவர்   மற்றெலார் ??     வெங்கடேஷ்  

  நிதர்சனம்

நிதர்சனம்   உலக வாழ்வில் சின்ன துரை பெரிய துரை தூக்கு துரை தம்பி துரை சாதிக்க முடியாததை இந்த துரை சாதித்துக்காட்டுவார் முடிப்பார் அவர் தான் பரிந்துரை   என்ன நெசந்தானே ??   வெங்கடேஷ்

 பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி  5

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி  5   1 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9 பொருள் : பெண்கள் தங்கள் அங்கங்களாகிய கை கால் காட்டி நம்மை மயக்குகிறார் – அந்த மங்கையரை தவம் செய்து மறந்திருப்பது எப்போது ??   2 பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்? 10 பொருள் : பெண்கள் மேல் இருக்கும் மோகம் ஆசை ஒழித்து  நான்…