சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1

சுத்த சன்மார்க்கமும் : சமயமும் மதங்களும் – ஓர் ஆய்வு – Part 1

I சுத்த சன்மார்க்கம் :

தெய்வம் : அ பெ ஜோதி ஆண்டவர்

இருப்பிடம் : சத்திய ஞான சபை

படிநிலை : 17வது நிலை – சுத்த சிவ துரியாதீதம்

II சைவம் :

தெய்வம் : நடராஜர்

இருப்பிடம் : சிதம்பரம் – ஆகாய ஸ்தலம்

படிநிலை : 15/16 வது நிலை – பொன்னம்பலம் – சிற்றம்பலத்தைக் குறிக்கின்ற ஆகாய வெளிகள்

III வைணவம் :

தெய்வம் : ரங்க நாதர்

இருப்பிடம் : ஸ்ரீ ரங்கம்

படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை

உட்பொருள் : நீரால் சூழப்பட்டுள்ளது ஆன்மா – ஸ்ரீ ரங்கமும் ஒரு தீவு – அது நீரால் சூழப்பட்டுள்ளது

IV சீக்கிய மதம் :

இருப்பிடம் : – அமிர்த சரஸ்

படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை

உட்பொருள் : நீரால் சூழப்பட்டுள்ளது ஆன்மா – பொற் கோவிலும் ஒரு தீவு போல் நீரால் சூழப்பட்டுள்ளது

V கிறிஸ்துவ மதம் :

தெய்வம் : இயேசு கிறிஸ்து

படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை

இயேசு கிறிஸ்து என்பது ஆன்மாவைக் குறிக்கின்றது

VI புத்த மதம் :

தெய்வம் : புத்தர்

படிநிலை : நிர்வாணம் அடைந்தார்

உட்பொருள் : நிர்வாணம் என்பது 36 தத்துவங்களைக் கடந்த நிலை – ஆன்ம அனுபவம் பெற்றிருக்கலாம் – ஆன்மா நிலையை அடையவில்லை

VII ஜைன மதம் :

தெய்வம் : மஹா வீரர்

படிநிலை : நிர்வாணம் அடைந்தார்

உட்பொருள் : நிர்வாணம் என்பது 36 தத்துவங்களைக் கடந்த நிலை – ஆன்ம அனுபவம் பெற்றிருக்கலாம் – ஆன்மா நிலையை அடையவில்லை

VIII வேதாந்தம் :

படிநிலை : 12/13 வது நிலை – துவாத சாந்தம் /திரையோதசாந்தம் வரை – ஆன்ம நிலை

உட்பொருள் : வேட்கை ஒழிந்த விடம் வேதாந்தம் – அது ஆசை அற்ற நிலை – ஆன்மா ஆசை இல்லாதது – எனவே வேதாந்தம் என்பது ஆன்ம நிலை

மேற்கூறியவைகளை ஆராயும்போது, உலகிலுள்ள எல்லா சமய மதங்களும, 12வது நிலையான ஆன்ம நிலையைத் தொட்டு நிற்க, சைவ சமயம் மட்டும், அதையும் தாண்டி சாகாக்கலைத் தழைக்கும் வெளிகள் வரை நிற்கிறது

எனவே தான் , வள்ளலார் சைவ சமயத்தில் மட்டும் தான் சாகாக்கலை சொல்லப்பட்டிருக்கிறது என்கின்றார்.

இப்பொழுது ஏன் வள்ளலார் சமய மதங்களை கடைப்பிடிக்க வேண்டாம் என்று கூறியதன் அர்த்தம் விளங்கும் என நம்புகின்றேன்- ஏனெனில் அவைகள் கடைசிப் படியான அ பெ ஜோதி ஆண்டவரை காட்டுவதில்லை . எனவே தான் வேண்டாம் என்று கூறுகின்றாரே தவிர சமய மதங்கள் பொய் என்ற அர்த்தத்தில் இல்லை

சுத்த சன்மார்க்கம் என்பது சமய மதங்களைத் தாண்டி , மேல் நின்று விளங்குவதாயும் அதனில், எல்லா அனுபவங்களும் அடங்கி விளங்குவதாயும் இருப்பது ஆகும்.

BG Venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s