அன்பு

அன்பு 1. திருவருட்பா : அன்பென்னும் பிடியினில் அகப்படும் மலையே 2. திருமந்திரம் : அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்திலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தப்பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே உலகியல் வழக்கில், அன்பு என்றால் 1. மனைவியிடத்து காட்டும் காதல் 2. பிள்ளைகளிடத்தில் காட்டும் பாசம் 3. பெற்றோரிடத்து காட்டும் பரிவு/அக்கறை 4. சுற்றாரிடத்து காட்டும் பாசம் 5. சமுதாய அக்கறை 6. தேசப் பற்று என்றே தான் வகைப்…

மகாபாரதமும் பேருபதேசமும்

மகாபாரதமும் பேருபதேசமும் 1. மகாபாரதம் : ஒரு முறை கண்ணனுக்கு, கை விரலில் அடி பட்டு, ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்த பாஞ்சாலி , பதைத்துப் போய், உடனே தன் சேலையைக் கிழித்து , ஒரு துண்டை எடுத்து , விரலில் கட்டுப் போட்டாள் அதற்கு கண்ணன் , வேளை வரும் போது, இந்த துண்டில் இருக்கும் ஒவ்வொரு இழைக்கும் , கோடிப் கோடிப் பங்கு உனக்கு திருப்பி அளிப்பேன் என்று கூறினான். பின்னர் நடந்த கதை…

மழையும் அமுதமும் – 1

மழையும் அமுதமும் மழை : புற அமுதம் என்பது வள்ளல் பெருமான் வாக்கு. இது மிகவும் தூய நீராகும். வானத்திலிருந்து நேரடியாக பூமியின் மேல் விழுவதால், அப்பழுக்கற்ற நீராகும். இது பெய்வதால் , நாடு நகரெல்லாம் செழிக்கும்.வளமும் சுபிக்ஷமும் பெருகும். இது உருவாகும் விதம் : பருவ காலத்தில், காற்று அந்த திசையில் வீசும் போது, கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றது. அந்தக் காற்றானது மலையில் சென்று மோதுகிறது. அதனால் அது மேல் நோக்கி…

ஒத்த விடம்

ஒத்த விடம் ஒரே விஷயத்தை நிறைய ஞானிகளும் சித்தர்களும் பாடியிருப்பார்கள் உதாரணமாக 1. திருவடி பற்றி – வள்ளுவரும் , வள்ளலாரும் இதில் திருவடி பற்றி அதிகம் பாடியது வள்ளலார் தான் 2. சும்மா இருக்கும் சுகம் பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள் 3. எட்டிரண்டு பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள் இந்த வகையில், ஒத்தவிடம் பற்றி வள்ளுவரும் , வள்ளலாரும் பாடியிருக்கின்றார்கள் திருக்குறள் : ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்…

பேருபதேசம் – சில விளக்கங்கள்

பேருபதேசம் – சில விளக்கங்கள் பேருபதேசம் முழுமையுமே வள்ளலார் ஆன்ம நிலையைப் பற்றியும் , அந்நிலைக்கு வாருங்கள் என்று எல்லோரையும் அழைப்பதுத் தான் 1. சாலைக்கு செல்ல கொஞ்ச நாட்களாகிய 10 தினம் இருக்கிறது என்கின்றார் வள்ளலார் . இதில் 10 தினம் என்பது நாட்களைக் குறிக்கவில்லை எட்டிரண்டு கூட்டினால் வரும் 10 பத்தைக் குறிக்கின்றார். 10 என்பது ஆன்மாவைக் குறிக்கும். 2. திரை விளக்கங்கள் யாவும் ஆன்ம தரிசனம் குறித்துத் தான். 3. என்னை ஏறாநிலை…

தூங்காத தூக்கம் – பாகம் 2 : சகஜ நிட்டை

தூங்காத தூக்கம் – பாகம் 2 – சகஜ நிட்டை நம் சாதனை பலத்தினால் , திருவடிகள் நம் கண் எதிரே ஒளிவிடும் – அதில் ஊன்றியும் , பற்றியும் நிற்க , மனம் செயலற்றுப் போய்விடும். திருவடிகள் – எல்லா அசைவையும் ஒழித்துவிடும் – உடல் – மனம் – பிராணனின் அசைவை முழுதும் ஒழித்துவிடும். மேலும், திருவடிகளானது , ரூபமாகவும் , காட்சிகளாகவும், எண்ணங்களாகவும் இருக்கும் மனோ நிலையை முழுதும் மாற்றி , அரூபமாகவும்,…

தூங்காத தூக்கம் – யோக நித்திரை

தூங்காத தூக்கம் – யோக நித்திரை : சித்தர் பாடல் : ஆங்காரத்தை உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்கமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ?? பெருமாள் ஸ்ரீ ரங்கத்தில் யோக நித்திரை செய்து கொண்டிருப்பதாக கூறுவர் நாம் தினமும் இரவில் தூங்குகின்றோம் – அது என்ன – எப்படி என்று தெரியும் ?? அதென்ன தூங்காத தூக்கம் ?? தூங்காமலே தூங்குவது என்பது தான் நாம் செய்ய வேண்டிய சாதனை – பயிற்சி நாம் தூங்கும்…

திருவடிப் பெருமை – பாகம் 3

திருவடிப் பெருமை – பாகம் 3 உலக நடையில் ஒரு பெண் “வயதுக்கு வந்த பின்னும்” “ உடல் பக்குவமடைந்த பின்னருமே” திருமணம் முடித்து ஆணுடன் கூட முடியும் இது புறம் அக நோக்கில் சாதனத்தில் திருவடி கொண்டு ஜீவனைப் பக்குவம் செய்தால் தான் அது ஆன்மாவுடன் கலக்கும் ஜீவாத்மா பிறக்கும் திருவடி கொண்டே காயாக இருக்கும் ஜீவனை கனிய வைக்க வேண்டும் வெங்கடேஷ்

திருவடிப் பெருமை – பாகம் 2

திருவடிப் பெருமை – பாகம் 2 பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும் பிறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோ அறமார் புகழ்த்தில்லை “அம்பலவாணர் அடிக்கமலம் “ மறவாதிரு மனமே இது காண் நல்மருந்துனக்கே 1 தன் தாயை நீங்கிய கோழிக் குஞ்சு பருந்துக்கு இரையாகுமா போல் திருவடி விட்டு நீங்கிய ஜீவன் எமனுக்கு பலியாகும் 2.பிரயாணத்தில் சரியான வண்டி பிடித்தால் சரியான நேரத்திலும் பாதுகாப்பாகவும் தன் ஊருக்கு போய்ச் சேருமா…

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் – 1

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் முன்னுரை : எல்லா ஞானிகளும், ரிஷிகளும், திருவடியைப் புகழ்ந்து பாடியுள்ளனர் தெய்வப் புலவர் வள்ளுவரும் ” கடவுள் வாழ்த்து ” என்னும் அதிகாரத்தில், திருவடியின் பெருமையும், வல்லமையை பற்றியும் 10 குறட்பாவில் பாடுகின்றார் வள்ளலாரும் ” திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை ” என்று பாடல் இயற்றியுள்ளார் வள்ளுவர் திருவடிப் பெருமை பற்றி கூறுகையில் , இதனை பற்றித் தான் பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும் என்று உறுதி படக்…