ஆயுத பூஜை – சன்மார்க்க விளக்கம்

ஆயுத பூஜை – சன்மார்க்க விளக்கம்

ஆயுத பூஜை என்னும் பண்டிகையின் வேரானது – ஆயுத எழுத்து என்னும் எழுத்தில் இருக்கிறது

தமிழிலில் ஆயுத எழுத்து என்பது மூன்று புள்ளிகளைக் குறிப்பிடுவது ஆகும்

மூன்று புள்ளிகள் என்பது – மூன்று கண்களைக் குறிப்பிடுவது ஆகும்

கீழ் உள்ள இரண்டு புள்ளிகளும் – இரண்டு கண்களையும் , மேலுள்ள புள்ளி – நெற்றியிலுள்ள நடுக்கண்ணையும் குறிப்பிடுகின்றது

மூன்று கண்களிலும் ஆயுதங்கள் அடங்கி இருக்கின்றன என்று சூக்குமமாய் நம் முன்னோர் தெரிவித்துள்ளனர்

தக்க சாதனைகள் மற்றும் தவம் மூலம் அந்த ஆயுதகளை வெளிப்படுத்தி, அதன் மூலம் , நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள மாயத் திரைகளை எரித்து , ஆன்ம தரிசனம் செய்ய வேண்டும் என்பது தான் ஆயுத பூஜையின் உட்கருத்து ஆகும்

மாயத் திரைகள் என்பது – மாயை – கன்மம் – ஆணவம் ஆகிய மூன்று மலங்கள் ஆகும்
மஹாபாரதத்தில், அர்ஜுன் ,12 வருட வனவாசமும் , ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடிந்த பிறகு , வன்னி மரப் பொந்திலிருந்து தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் எடுத்து. அதன் மூலம் தன் சகோதரர்கள் நூறு பேரையும் கொன்றது என்பது –

வன்னி மரப் பொந்து = 2 புருவ மத்தியில் இருக்கும் சுழிமுனைத் துவாரம்

கௌரவர்களாகிய 100 பேரும் – மலங்களாகவும் திரைகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்

ஆயுதங்கள் என்பது = பிரணவத்திலிருந்து கிளம்பும் நவரத்தினங்களாகிய 9 ஒளிகளாகும்

இந்த சம்பவம் மூலம் ஆயுத பூஜையின் உண்மைப் பொருள் நிரூபிக்கபட்டிருக்கின்றது

அர்ஜுன் என்னும் விஜயன் இதனை பத்தாவது நாளில் செய்ததால் , இப்பண்டிகையை ” விஜயதசமி ” என்று கொண்டாடி வருகின்றோம்

ஆயுதங்கள் உள்ளடக்கிய சூக்கும புள்ளிகளை கொண்டாடும்/ வணங்கும் நாள் – ஆயுத பூஜையாகக் கொண்டாடப்பட வேண்டும்

ஆனால் , நாம் , இதன் உண்மை புரியாமல் என்ன செய்கின்றோம் ??

நம் வாழ்க்கை நடத்த/ பொருள் ஈட்ட , உதவியாய் இருக்கும் எல்லா கருவிகளையும் , உபகரணங்களையும் வைத்து, நன்றி செலுத்தும் விதமாக அதற்கு பூஜை , வழிபாடுகள் செய்கின்றோம்

ஆயுதம் என்பது என்ன – அதனை வைத்து என்ன செய்வது என்று தெரியாததால்,
நாம் கொண்டாடும் பண்டிகைக்கும் உண்மைக்கும் வெகு தூரம் .

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s