ஒத்த விடம்

ஒத்த விடம்

ஒரே விஷயத்தை நிறைய ஞானிகளும் சித்தர்களும் பாடியிருப்பார்கள்

உதாரணமாக

1. திருவடி பற்றி – வள்ளுவரும் , வள்ளலாரும்
இதில் திருவடி பற்றி அதிகம் பாடியது வள்ளலார் தான்

2. சும்மா இருக்கும் சுகம் பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள்

3. எட்டிரண்டு பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள்

இந்த வகையில், ஒத்தவிடம் பற்றி வள்ளுவரும் , வள்ளலாரும் பாடியிருக்கின்றார்கள்

திருக்குறள் :

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்
மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்

திருவருட்பா :

ஒத்தவிடம் நித்திரை செய்யென்றீர் – அந்த
இடம் காட்ட வாரீர்

ஒத்தவிடம் என்றால் என்ன ??

ஒத்தவிடம் என்றால் இரு வினையும் சமம் ஆகின்ற இடம் – வினைகள் தீர்கின்ற இடம் – கன்ம மலம் அறுகின்ற இடம் ஆகும்

இது எப்படி சாத்தியம் எனில் –

நாம் செய்கின்ற வினைகள் மூன்று வகை :

1. பழ வினைகள் – முழு கன்ம கணக்கு
2. மேலிருந்து, இந்த ஜென்மத்திற்கு அனுபவிக்க கொண்டு வந்திருக்கும் கன்மம்
3. இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள்

இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள் பழ வினைகள் கணக்கில் சேர்ந்து கொண்டே வரும் – இதனால் , கன்மங்களும் , பிறவியும் தொடர்ந்து கொண்டே வரும்

இந்த சங்கிலித் தொடரை எப்படி அறுப்பது ??

நாம் செய்யும் தவத்தினால் – இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள் பழ வினைகள் கணக்கில் சேராமலும், பழ வினைகள் கணக்கில் இருப்பது மட்டும் குறைந்து கொண்டே வர வேண்டும்

இப்படி செய்தால் மட்டுமே – வினைகள் தீரும் என்பது திண்ணம்

இப்படி செய்தால் மட்டுமே – வினைகள் தீரும் என்பது திண்ணம்

இரு வினையும் சமமானால் – ” சத்தினிபாதம் ” என்னும் நிலை வரும் – அது வாய்த்தால் , அருள் வந்து நம்மீது பதியும் – அருள் வந்தால் எல்லா சித்திகளும் – மரணமில்லாப் பெருவாழ்வும் நாம் அடைவோம்
இது நடைப் பெறுவதற்கு – நாம் – சுழிமுனையை – ஆன்ம நிலையை அடைய வேண்டும் – அன்னிலையில் மட்டுமே இது சாத்தியம் ஆகும்

ஏனெனில் – ஆன்மாவிற்கு கன்ம மலம் கிடையாது – எனவே ஆன்ம நிலையில் இரு வினையும் சமம் ஆகி , வினைகள் தீர்ந்து விடும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s