குண்டலினி யோகம்

குண்டலினி யோகம் 

இந்த யோகம், நம் ஆன்மீக சமுதாயத்திலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்

அனேக மக்கள் , குண்டலினி யோகம் பயில்வதாக நாம் கேட்டிருப்போம்

பட்டப் படிப்பில் , எப்படி specialisation உள்ளதோ, அவ்வாறு, யோகத்தில் , specialisation , குண்டலினி யோகம் என்று சொல்லலாம்.

தற்கால நம்பிக்கைகள் :

அனேக குருமார்கள் , நம் சம காலத்திலும் கூட, குண்டலியின் இருப்பிடம் முதுகுத் தண்டின் கீழ் உள்ள மூலாதாரம் என்றே உலகிற்கு அறிவித்துள்ளனர்

அதனை விழிக்க வைக்கும் முறையானது யாதெனில் : மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் என்றே கூறிச் சென்றுள்ளனர்

மேலும் , அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேற்றி, கடைசியில், ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் என்பர்

மேலும் , சில குருமார்கள், இந்த யோகம் ஏதோ கடினமான கணக்கு ( நிறைய படிகள் ) போன்று பாவித்து, அதனை எளிமைப் படுத்துதல் போன்று, இதனை SKY – Simplified Kundalini Yoga ) என்று கற்றுகொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்ற வேண்டும் – பயிற்சி முடிந்த பின் – அதை கீழிறக்கி கொண்டு வந்து மூலாதாரத்தில்
சேர்த்து விட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்றுவது கடினமாக இருக்கின்றது ( நிறைய படிகள் ) என்பதால் , இதனை நேராக
ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் தான் SKY என்று கற்றுத் தந்தனர்

உண்மை : இருப்பிடம் மற்றும் விழிப்பிக்கும் முறை

பாரதத்தில்  கண்ணன் யமுனை  நதியின் அடியில்  ஒரு பாம்பு எழுப்பி மேல் வந்து , அதம் தலை மீது  நடனம் ஆடுவான் , குழல் ஊதுவான்

அது  காளிங்கன் ஆகிய குண்டலினி

அந்த நடனத்தை ஓவியமாக வரைந்து ” காளிங்க  நர்த்தனம் ” என உலகம் தலை வைத்து கொண்டாடுது

தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = ” ய + முனை ” என்று வரும் – இது சுழிமுனையைக் குறிக்கும் – ” ய” என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும்

எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது – முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல

அது உச்சியை தன் விஷ முகத்தால் மறைத்து வைத்துளது

வள்ளலார் : ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்று அகவலில் பாடுகின்றார் – இங்கு குளம் என்பது நெற்றி ஆகும்

குளம் என்பது நீர் நிறைந்தது – யமுனை நதியும் நீர் நிறைந்தது

ஆகவே , குண்டலினி , ஆன்மா இருக்கின்ற நெற்றியில் இருக்கின்றதே அல்லாது மூலாதாரத்தில் அல்ல

அசைப்பிக்கும் முறை : ” சாலனம் ” என்னும் தந்திரத்தாலல்லாது வேறெதனாலும் குண்டலினியை அசைக்கவோ விழிப்பிக்கவோ முடியாது – இந்த தந்திரத்தை தக்க குரு மூலம் தெரிந்து பயில வேண்டும்

மேலும் திருவடி உதவி இல்லாமல் இதனை செய்ய முடியாது என்பதுவும் உறுதி

குண்டலினியை மேலேற்றுவதும் இல்லை கீழிறக்குவதும் இல்லை – அது ஒரே இடத்தில் , தன் விஷ முகத்தால் , பிரம்மத்துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது

சிதாகாயப் பெருவெளிக்கு போகின்ற நம் பாதையை மறைத்துக் கொண்டிருக்கின்றது

குண்டலியின் இருப்பிடமாக இந்த உலகினில் அடையாளமாக காட்டப்பட்டிருக்கும் ஊர்:

1. மதுரை – துவாதசாந்தம்

மதுரையில் நடந்த 64 திருவிளையாடல்களில் ஒன்று – ஒரு பெரிய நாகம் இந்த ஊரின் எல்லையை சுற்றி இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள் – அந்த நாகம் – குண்டலினி

2. ஆலப்புழா – கேரளா :

ஆலம் = விஷம்
புழா – சிறிய துவாரம் – பிரம்மத்துவாரம்

சாதகன், சாதனைகள் மூலம் துவாதசாந்த நிலை அடைந்து , குண்டலினியை அப்புறப்படுத்தி விட்டு, மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் – தகுதி உடைய சாதகர்களுக்கு குண்டலினியும் வழி விட்டு நிற்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s