தூங்காத தூக்கம் – பாகம் 2 : சகஜ நிட்டை

தூங்காத தூக்கம் – பாகம் 2 – சகஜ நிட்டை

நம் சாதனை பலத்தினால் , திருவடிகள் நம் கண் எதிரே ஒளிவிடும் – அதில் ஊன்றியும் , பற்றியும் நிற்க , மனம் செயலற்றுப் போய்விடும்.

திருவடிகள் – எல்லா அசைவையும் ஒழித்துவிடும் – உடல் – மனம் – பிராணனின் அசைவை முழுதும் ஒழித்துவிடும். மேலும், திருவடிகளானது , ரூபமாகவும் , காட்சிகளாகவும், எண்ணங்களாகவும் இருக்கும் மனோ நிலையை முழுதும் மாற்றி , அரூபமாகவும், எண்ணம் அற்ற நிலைக்கு கொண்டு சென்று விடும்

இது மனம் இறந்த நிலை – தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலை

இந்த நிலையில் . மூளை மிகவும் அமைதி அடைந்துவிடுவதால் , உடலை மூளை கட்டுப்படுத்துவதால், உடலும் பதற்றமில்லாமல் , அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றது

மனம் அமைதி அடைந்து விடுவதால், உடலின் இயக்கம் குறைந்து, சக்தி வீணாவது குறைந்து போய், அதனால் , பசி, தாகம் , தூக்கம் , ஆசை எல்லாம் குறைந்து கொண்டே வரும்
சரியான சாதனை என்றால் இதெல்லாம் குறைந்து கொண்டே வர வேண்டும்

சாதனையின் பலம் கூடக் கூட , உள் செல்லும் மூச்சின் அளவு குறைந்து கொண்டே வரும் – உடல் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்

மேலும் சாதனையினால், உடல் தேவையற்ற கழிவுகளை புறந்தள்ளி, உடலின் எடையும். உயரமும் கூட குறைந்து விடும் – உடல் பஞ்சு போல் மிருதுவாக லேசாகி விடும்

இந்தப் பயிற்சியை ஒரிடத்தில் அமர்ந்து , முயற்சியும், பிரயாசைப்பட்டும் , அந்த மேலான அந்த ” ஒன்றிய” நிலையை ( சமாதி ) அடைவர் – இது சாதாரண பாகம்

இதுவே , தன் முயற்சி இல்லாமலும் , எப்பொழுதும் திருவடியுடன் ” ஒன்றிய ” நிலையில் இருப்பதைத் தான் ‘ சகஜ சமாதி ” என்று கூறுகின்றனர் –

” சமாதிப் பழக்கம் பழக்கமல்ல – சகஜப் பழக்கம் வேண்டும் ” என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார் – இது அனுபவத்திற்கு வருவது மிகவும் கடினம் –

இதனால் தான் – தாயுமானவ சுவாமிகள் = ” சகஜப் பழக்கத்திற்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் ” என்கின்றார்

சாதனை இந்தத் திசையில் சென்றால் தான், நாம் ஆன்ம நிலையையும் , ஆன்ம அனுபவமும் , தரிசனமும் பெற முடியும் – மேலும் வளர்ந்து, திருச்சிற்றம்பலத்திற்குள், சத்திய ஞான சபைக்குள் நுழைய முடியும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s