தேகமும் தேசமும் – 1

தேகமும் தேசமும்

நம் ரிஷிகளும் , ஞானியர்களும் தாங்கள் மெய்யில் உணர்ந்த / பெற்ற அனுபவங்களை எல்லாம் புறத்திலே ஊர்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து போயிருக்கின்றனர்

அதில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்

1. திருச்சிராப்பள்ளி :

இறைவன் சிரத்திலே பள்ளி கொண்டுள்ளான் என்பதை புறத்திலே காட்டுவதற்காக அமையப் பெற்ற ஊர்

2. மதுரை :
மதுரமான ஊர். மதுரம் போன்ற இன்பத்தைக் கொடுக்கின்ற ஊர் அதாவது – ” ஐ ” என்பது நெற்றிக்கண்ணைக் குறிப்பிடும் – நெற்றிக்கண்ணை திறக்கும் பயிற்சி செய்வோரை ” ஐயர் ” என்றும் ” ஐயா” என்றும் அழைக்கப் பட்டனர். தற்போது, பழக்க வழக்கங்கள் மாறி , வயதில் மூத்தோரை ஐயா” என்று அழைப்பது ஆயிற்று – ஆனால் சன்மார்கத்தில் , எல்லோரையும் ஐயா என்று அழைக்கின்றனர்

3 . ஆலவாய் : ( மதுரை )
ஆலம் = விஷம் – அதாவது பிரம்ம துவாரத்தை , குண்டலினியானது, தன் முகத்தால் ( விஷம் ) மூடியுள்ளதால், மதுரைக்கு ஆலவாய் என்றும் , சுந்தரேஸ்வரருக்கு ஆலவாயப்பன் என்று பெயர்

4. திரு வாதவூர் : நம் சுவாசக் காற்று ( அபானன் ) – ” வாசி ” யாக வாதம் ஆகும் ஊர்- அதனால் வாதவூர்

5. பெருந்துறை : ( மாணிக்க வாசகர் ) : பெரிய துறைமுகம் போன்ற ஊர் – இவ்வூரின் பெயர் நேர் எதிர்ப்பதமாக வைக்கப்பட்டுள்ளது – அதாவது அணுவைக்காட்டிலும் மிகச் சிறிய துவாரம் – இதனை திறந்து உள்ளே நுழைந்தால் தான் ஆன்மா மற்றும் எல்லா அறிவுப் பெருவெளிகளுக்கும் செல்ல முடியும் – அதனால் பெருந்துறை என்று வைக்கப்பட்டுள்ளது

In English its called paradox

6. கன்னி “ய” குமரி : இது நம் நாட்டின் முனையில் அமைக்கப் பெற்ற ஊர். இந்த ஊர் சுழுமுனையைக் குறிக்க வந்த ஊராகும் –
இது மூன்று கடல்களின் சங்கமம் ஆகும் இடத்திலே இருக்கின்றது – அது போன்று சுழுமுனையும் மூன்று நாடிகளின்ன் சங்கமம் ஆகும் இடத்தில் இருக்கின்றது

ஆன்மா என்பது ” ய ” கரம் – 10 ( எட்டிரண்டு கூட்டினால் வரும் பத்து ) – அது தனிக்குமரி ஆதலால் – இவ்வூருக்கு, கன்னி “ய” குமரி என்று பெயர்

மூன்று பொருட்களின் கலப்பு – இடகலை – பிங்கலை – சுழுமுனை நாடிகளின் கலப்பு தான் – திரிவேணி சங்கமம் – காசியாகவும் – ஈரோடு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயமாகவும் – திரிகூடமலையில் அகத்தியர் வாழ்வதாகவும் கற்பித்துள்ளனர்

7. மயிலாடுதுறை :
பல வண்ண ஒளிகளுடைய ஆன்மா ( மயில் ) நடமிடும் நீர் சூழ்ந்த இடம், துறைமுகம் = நீர் இருக்குமிடம்

8. திருவையாறு : ஐந்து நதிகளும் ஓரிடத்தில் கூடுமிடம் – அதாவது நம் பஞ்ச இந்திரியங்களும் ஒன்றாக கூடும் இடம் = இதனை செய்து முடிக்கும் திறம் படைத்தோர் – இந்திரிய ஒழுக்கம் கைவல்லியம் பெற்றவர் ஆவார்

9. பூவிருந்தவல்லி – பூந்தமல்லி ஆக மருவி இருக்கின்றது :
பூ = கண்மலர் – அதாவது கண்மலரில் சக்தி இருக்கின்றாள் என்பதை காட்ட ஏற்படுத்தப்பட்ட ஊர்.

10 கும்பகோணம் : பிரணவமாகிய கும்பத்தில் இறைவன் இருக்கின்றான் – இறைவன் கும்பகம் என்னும் மூச்சு இல்லா நிலையில் இருக்கின்றான் என்று குறிக்க ஏற்பட்ட ஊர்

11. திருவிடை மருதூர் :
மருது = காற்று , பிரணவத்தின் இடைப் பாகத்தில் , சுவாசக் காற்றின் இயக்கம் இருக்கின்றது என்பதை காட்ட ஏற்பட்ட ஊர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s