மகாபாரதமும் பேருபதேசமும்
1. மகாபாரதம் : ஒரு முறை கண்ணனுக்கு, கை விரலில் அடி பட்டு, ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்த பாஞ்சாலி , பதைத்துப் போய், உடனே தன் சேலையைக் கிழித்து , ஒரு துண்டை எடுத்து , விரலில் கட்டுப் போட்டாள்
அதற்கு கண்ணன் , வேளை வரும் போது, இந்த துண்டில் இருக்கும் ஒவ்வொரு இழைக்கும் , கோடிப் கோடிப் பங்கு உனக்கு திருப்பி அளிப்பேன் என்று கூறினான்.
பின்னர் நடந்த கதை எல்லோர்க்கும் தெரியும்
இதில் , கண்ணன் = ஆன்மா
பாஞ்சாலி = ஜீவன்
2. பேருபதேசம் – வள்ளலார் – சித்தி வளாகத்தில் :
எல்லோர்க்கும் தாய் , தந்தை , அண்ணன் , தம்பி முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்கு கோடிப் கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இது ( சித்தி வளாகம் ) என்று குறிப்பிடுகின்றார்
கண்ணன் சொன்னதைத் தான் வள்ளலார் கூறுகின்றார்.
ஆன்மாவை அடைந்தால் கோடிப் கோடிப் பங்கு உதவி கிடைக்கும் என்று இருவரும் கூறுகின்றனர்.
மகாபாரதமும் பேருபதேசமும் ஒரே கருத்தைத் தான் வலியுறுத்துகின்றன
பின், எப்படி புராணங்கள், இதிகாசங்கள் பொய் ஆகும் ??
பேருபதேசத்தை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் – அது – ” ஆன்மாவாக மாறு ” அவ்வளவே
வெங்கடேஷ்