சுழிமுனையும் & கண்ணனும்
நாம் எல்லோரும் அறிந்தது – நம் உடம்பில் பிரதான நாடிகள் மூன்று : இடகலை – பிங்கலை – சுழிமுனை நாடி
நாம் விடும் மூச்சுக் காற்று , ஏதாவது ஒரு நாசியில் நுழைந்து , மற்றொரு நாசி வழியாக வெளி வருகிறது – இது சாதாரண பாகம். எல்லோருக்கும் நடைபெறுவது. சுழிமுனை இயக்கம் என்பது இரு நாசியிலும் ஒரே சமயத்தில் சுவாசம் செல்வது – இது நடப்பது மிகக் கடினம் – நடப்பதே இல்லை எனலாம்.
இந்த சுழிமுனை நாடியில் பெரும் ரகசியங்கள் பொதிந்து இருக்கிறது.பாரதக் கண்ணனின் குணாதிசயங்களையும் லீலைகளையும் நன்கு ஆய்ந்தால் , அதனை புரிந்து கொள்ள முடியும்
சுழிமுனை நாடி தன்மைகள் :
1.எந்தக் குணமும் இல்லாத அலி நாடி – அதனால் தான் வள்ளலார் : நான் ஆணுமல்ல பெண்ணுமல்ல – அலியுமல்ல என்று தான் அடைந்த சுழிமுனை அனுபவத்தை இவ்வாறு பாடுகிறார்.
2. கண்ணாடி போன்று சுற்றிலும் நடக்கும் எல்லா உலக நடப்புக்களை காட்ட வல்லது . வள்ளலார் : மேட்டுகுப்பத்திலிருந்தபடியே , சத்திய ஞான சபையின் கட்டுமானப் பணியினை மேற்பார்வை இட்டது என்பது இதனால் தான்
3. இந்த நாடியில் நாம் சென்று கலந்தால் , நமக்கு புறத்திலிருந்து எந்த பாதிப்பும் உண்டாகாது – நாம் ஆசை , சலனம் , கவலை, சந்தோஷம் , துன்பம் , இன்பம் , துக்கம் இவைகளால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்போம்
நாம் நிர்க்குணமாக நிற்போம்.
இதில் நின்றால், நாம் உலகத்தில் இருப்போம் , ஆனால் உலகம் நம்முள் இருக்காது – பாரதக் கண்ணன் : உலகத்தோடு ஒட்டியிருந்தும், வெண்ணை போன்று, நீரில் மிதப்பது போன்று , ஒட்டாமல் இருப்பான் .
ஆன்மாவின் இந்தக் குணத்தை உலகிற்கு வெளிப்படுத்தத் தான், கண்ணன் அவ்வாறு சித்தரிக்கப்பட்டான் .
அவனுக்கு வெண்ணை மிகவும் பிடிக்கும் என்று சித்தரித்தனர் ஞானிகளும் ரிஷிகளும்
வேதங்கள் கூறும் – ஸ்திதப் ப்ரக்ஞன் என்னும் லட்சணம் இது – சம நோக்கு பார்வை – எல்லாம் ஒன்று – ஒருமை என்பது எல்லாம் இங்கு நிற்கும் போது தான் ஏற்படும் என்பது உண்மை
4. இந்த நாடியின் அனுபவம் : நமக்கு எல்லா நாதங்களும் – தச நாதங்களும் கேட்கும் – இது நாதஸ்தானம் – பாரதக் கண்ணன் கையில் புல்லாங்குழல் அதனால் தான்
5. இந்த நதியில் சென்று நீந்தினால் தான் , அறிவின் உச்ச நிலை – அனுபவங்களுக்கு செல்ல முடியும் – இது தான் ஒரே வழி .
6. இந்த மலை மீது ஏறி விட்டால், நாம் உலகத்தில் அடைய வேண்டியது எதுவும் இல்லை – அடைந்தாலும் , அதனால் லாபம் ஒன்றும் இன்று = ஏனெனில் இதற்கு நிகர் எதுவும் இல்லை – இது தான் பூரணம் – முழுமை .
7. நாம் இங்கு சென்று நின்றால், கற்பு நிலை நம்மை வந்து அடைந்து விடும் – நாம் கற்புடையவர்களாகிவிடுவோம் – நாம் சொல்வது உடனே நடக்கும் – எண்ணுவது உடனே ஈடேறும்
முடிவுரை :
ஒருமை – கற்பு – கல்பதரு – கற்பக விருக்ஷம் – அக்ஷய பாத்திரம் – அமுத சுரபி – எல்லாம் சுழிமுனையில் – ஆன்ம நிலையில் இருக்கின்றது
வெங்கடேஷ்
9600786642
விளக்கங்கள் ஞானக்கருத்தோடு இருப்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இவையெல்லாம் அனுபவத்துக்கு வர எளிய வழி சொல்லவும்
LikeLiked by 1 person
pl call 9600786642 – 6369189483
LikeLiked by 1 person