பேருபதேசம் – சில முரண்பாடுகள்
வள்ளலார் – பேருபதேசத்தில் – பச்சைத் திரை – இரு கூறுகளாக இருக்கின்றது – கருமையிற் பச்சை – பொன்மையில் பச்சைத் திரை என்று பிரிக்கின்றார்.
முதலாவது இகலோக இச்சை உடையது என்றும் – மேலிருக்கும் இரண்டாவது திரை பரலோக சாத்தியம் உடையது என்றும் கூறுகின்றார்.
மேலும் வள்ளலார் , அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வரும் போது, முயற்சி சிறிதும் இல்லாதவர்களுடைய கீழிருக்கும் கருமையிற் பச்சைத் திரை மாத்திரம் விலக்குவார் – இதனால் – நாம் கூடிய மட்டும் புனிதர்களாக இருப்போமே அல்லாது – பெற வேண்டியதை பெற்று கொள்ள முடியாது என்றும் கூறுகின்றார்
கருமையிற் பச்சைத் திரை விலகிவிட்டால் , அதிவிரைவில் மற்ற எல்லா திரைகளும் விலகிவிடும் என்கிறார்.
வள்ளலார் வாக்கு உண்மையெனில் , எல்லோருடைய கருமையிற் பச்சைத் திரை இன் நேரம் விலகி இருக்க வேண்டும் அல்லவா ?? ஏன் எனில் , 99.95 % சன்மார்க்கிகள் முயற்சி சிறிதும் இல்லாமல் – எந்த ஒரு சாதனமும் செய்யாமல் – சோறு மட்டும் போடுதல் சன்மார்க்கம் என்று இருப்பதால் , இந் நேரம் அவர்களுடைய கீழ் பச்சைத் திரை ஆண்டவர் விலக்கி இருக்க வேண்டும் – ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .
வள்ளலார் வாக்கு தப்பாது – அப்படியெனில் – பேருபதேசம் மற்றும் உரை நடை யாவும் வள்ளலார் தம் கைப்பட எழுதியவை அன்று.
அவரின் தொண்டர்கள் அவர் கூறியவற்றை தொகுத்து வழங்கியது தான் உரை நடைப் பகுதி என்று உறுதி ஆகின்றது.
அது போலவே , உரை நடையில் இருக்கும், புராண இதிகாசங்களைப் பற்றிய குறிப்பும் , திருப்பாற்கடல் மற்றும், கல்ப நியாயம் பற்றிய குறிப்பும் அவருடைய தொண்டர்களுடையதாக இருக்குமே அல்லாது வள்ளலாருடையதாக இருக்காது
வெங்கடேஷ்
எல்லோருடைய கருமையிற் பச்சைத் திரை என் விலகவில்லை?, தவம் செய்தல் மட்டும்தான் விலகும், சும்மா திரை விலகி விடாது, உரை நடைப் பகுதியை தொகுத்து வழங்கியது வள்ளல் பெருமான் தான்.
LikeLike
சோறு மட்டும் போடுதல் சன்மார்க்கம் என்று இருப்பதால்//நன்றாக சொன்னீர்கள்
LikeLike