மனத்தை அடக்குவது எப்படி ??

மனத்தை அடக்குவது எப்படி ??

ஏன் மனம் நம் சொல்படி நடப்பதில்லை ??
ஏன் உடம்பு நம் கட்டளைக்கு அடி பணிவதில்லை ?
நம் உடம்பு தன் பாட்டிற்கு இயங்குகின்றது- மூச்சு தானாகவே உள்ளே போகின்றது வருகின்றது – காலம் போகப் போக வயது ஏறிக் கொண்டே போகின்றது – நம்மைக் கேட்காமலே எல்லாம் நடக்கின்றது

இதெல்லாம் எப்படி சாத்தியம் ??

ஏன் என்றால் உடம்பு 96 தத்துவங்களால் ஆனது – அதில் 36 முக்கியமானவை – இவைகள் தான் உடம்பை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன

இந்த 36க்கும் தலைவன் சிவம் – எனவே அவைகள் சிவத்தின் கட்டளைக்கு அடி பணிந்து நடக்குமே அல்லாது நம் கட்டளைக்கு அடி பணியாது

உதாரணம் : ஒரு நிறுவனத்தில் , உற்பத்திப் பிரிவில் பணி புரியும் ஒருவர் , தன் மேலதிகாரிக்கு அடி பணிந்து நடப்பார் – ஆனால் , அதே நபர் வேறு பிரிவு அதிகாரி வந்து வேலை கொடுத்தால் , அதை செய்யமாட்டார். – ஏனென்றால் , அவர் அவருடைய மேலதிகாரி கிடையாது. . அவருக்கு அடி பணியவும் மாட்டார் – பயப்படவும் மாட்டார்

அது போலவே , 36 தத்துவங்களும் சிவத்திற்கு மட்டுமே கட்டுப்படும் – நம்மை மதிக்காது

இதை மாற்றுவது எப்படி ???

நாம் நம் , தவத்தினாலும் , அன்பினாலும், ஒழுக்கத்தினாலும், ஜீவகாருன்யத்தினாலும், சிவத்தை நம் வசப்படுத்தினால் மட்டுமே இந்த 36ம் நமக்கு கட்டுப்படும்

மற்றொரு உதாரணம் : 36 தத்துவங்களுக்கும் சக்தி எண் 50 என்றால், அதை அடக்க நம்மிடம் அதைவிடவும் அதிகமாக இருக்க வேண்டும் – அப்பொழுது தான் அவைகல் நமக்கு கட்டுப்படும்

உண்மையில் , நம்மிடம் அதை விடவும் சக்தி குறைஉவாக இருப்பதால் , நம்மால் அதை கட்டுப்படுத்த முடிவதில்லை – எனவே நாம் சிவத்திற்கு அடிமை ஆகி, சிவம் நம் வசப்பட்டால், மனம் முதலிய கரணங்கள் நம் நம் வசப்பட்டு நிற்கும். இது திண்ணம்

இது ஒன்றே வழியாகும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s