உலகெலாம் ” – சன்மார்க்க விளக்கம்

உலகெலாம் ” – சன்மார்க்க விளக்கம்

தேசத்தின் விரிவு :

வள்ளலார் , ” உலகெலாம் ” என்ற ஒரு வார்த்தைக்கு விளக்கமாக ” மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் ” எழுதி , அதில் தத்துவ உலகங்களை 80 – 90 பக்கங்களுக்கு அண்டங்களின் விரிவை எடுத்துக் கூறுகின்றார்

தேகத்தின் விரிவு :
பிண்ட அனுபவ இலக்கணமாக உரை நடைப் பகுதியில் விவரிக்கின்றார்.

இவைகள் எப்படி சாத்தியம் ஆயிற்று ??

* ஆன்ம நிலையில் மாயா மலம் காரியப் படாது ஆகையால், ஸ்தூலக் கண்களுக்கு எல்லாம் பட்டப் பகல் போல் வெளிச்சம் ஆகிவிடுகின்றது

அப்போது இது சாத்தியம் ஆகின்றது

** ஜீவகாருண்யத்தின் பலனாக நாம் ஆன்ம நிலையை அடைந்து விட்டால் , நம் அறிவு விசாலமாகி, அண்ட அண்டங்களைக் கடந்து விளங்கும். கண்ணில் மறைப்பாகிய மாயா மலம் நீங்கி விட்ட படியால் எல்லாம் பட்டப் பகல் போல் விளங்கியும், நம் அறிவு அண்டங்களைக் கடந்தும் விளங்கும்.

மேற்கூறியவைகள் யாவுமே ஆன்ம நிலையில் மட்டுமே சாத்தியம் – ஆன்ம அனுபவங்கள்.

அப்போது இது சாத்தியம் ஆகின்றது

இதற்கானப் பயிற்சியும் விடையும் :

கண்ணில் உள்ள மாயா மலமாகிய இருளை பரவிந்து ஒளியானது உண்டு விட்டால் , உலக விரிவையும் , சரீர அமைப்பின் உள் விரிவையும் , தத்துவங்களையும், பஞ்ச பூத சூக்கும அதி தேவதைகளையும் , ஆத்மத்தையும் , பரத்தையும்  ” பார்க்க கண்கள் பூரண சக்தியைப் பெற்றுவிடும்

இந்த பயிற்சியில் வள்ளலார் வெற்றி பெற்றிருந்ததால், அவருக்கு அண்டத்தின் விரிவும் மற்றும் தேகத்தின் விரிவும் செயல்பாடும் கண்களுக்கு தெரிந்தது என்பது
உறுதி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s