காந்தாரியும் காயகல்பமும்

11.2.2015

காந்தாரியும் காயகல்பமும்

காந்தாரி தன் புருஷன் திருதராஷ்டிரன் குருடன் என்பதை அறிந்து , தானும் அந்த இன்பத்தை – உலகத்தை காணக்கூடாது என்பதற்காக , கண்ணைக் கட்டிக்கொண்டாள் நாம் அனைவரும் அறிந்ததே

ஆனால் நாம் அறியாததை இப்போது படிக்க போகின்றோம் – அந்த நிகழ்வானது எப்படி தவமாக மாறியது என்பதைப் பார்க்கப் போகின்றோம்

பாரதக்கதையில், கௌரவர்கள் 100இல்,99 சகோதரர்களும் மாண்டுவிட,துரியோதனன் மட்டுமே எஞ்சி உள்ளான். தாயும் மகனும் மீளா சோகத்தில் உள்ளனர்.

அப்பொழுது அவளுக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது – அவனை காப்பாற்றுவதற்காக, இரவில், பிறந்த மேனியாக ( உடம்பில் துணியில்லாமல் ) வரச் சொல்கின்றாள். அவனும் சரி என்கிறான்.

கண்ணன் இதை அறிந்து , துரியோதனன் கங்கையில் குளித்து விட்டு , தாயைப் பார்க்கச் செல்லும் போது ,  இடை மறித்து, ஒரு சூது செய்து . அவனை , தொடையை மட்டும் துணியால் மறைத்துச் செல்லும்படி செய்து விடுகின்றான்.

துரியோதனனும் தாயின் முன்னால் சென்று நிற்கின்றான், காந்தாரியும் , தன் கண்கட்டை அவிழ்த்து, அவன் உடல் முழுமையும் தன் கண்ணால் நோக்குகின்றாள். அதிர்ச்சி அடைகின்றாள்.

வரும் வழியில் கண்ணனை பார்த்தாயா என்று கேட்கின்றாள் ??  – ஆமாம் என்கிறான்.
மோசம் போனாயே என்கின்றாள்.

காந்தாரியின் பார்வையால் அவன் உடல் முழுதும் வஜ்ஜிர தேகம் ஆகிவிடுகின்றது – தொடை பகுதியை தவிர .அவன் உடல் கல்பம் ஆகிவிட்டது.
எப்படி என்று நீங்கள் ஆச்சரியத்தில் வினவலாம்??

அதில் தான் இரகசியம் இருக்கின்றது .
காந்தாரி தான் உலகத்தை பார்க்காமல் சேமித்து வைத்திருந்த கண்ணின் சத்தியை , பார்வையின் சத்தியை ( அது தவமாக மாறிவிட்டது ) அவன் உடல் முழுதும் செலுத்தி , அதன் மூலம் அந்த உடம்பை கல்பம் செய்து விட்டாள்.

இப்போது துரியோதனன் உடல் யாராலும் அழிக்க முடியாது ஆனால் தொடையில் அடித்தால் மட்டும் உடல் வீழ்ந்து விடும் – இது கண்ணனின் சூழ்ச்சியால் நடந்தது

மேலே கூறப்பட்ட அந்த இரகசியம் இது தான் : உடலை கல்பம் செய்யும் வல்லமை – கண்ணிற்கு இருக்கின்றது – பார்வைக்கு இருக்கின்றது – அதனால் தான் வள்ளலார் – கண்ணே – மணியே – கண்ணின்மணியே – என்றெல்லாம் பாடுகின்றார்.

இந்த இரகசியம் தெரிந்து கொண்ட பிறகு, ஆறாம் திரு முறை மீண்டும் மீண்டும் ஓதி வர , சன்மார்க்க சாதனை என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளங்கும்

நன்றி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s