கண்ணண் : சில விளக்கங்கள்

17.2.2015
கண்ணண் : சில விளக்கங்கள்

கண்ணண் என்றவுடன் பிருந்தாவனத்தில் லீலை புரிந்தவனையே நினைவு கொள்கின்றோம்.
ஆனால் உண்மை என்னவெனில் –

“கண்ணில் இருப்பவனே கண்ணண்”
” கண்ணில் இருப்பவளே கண்ணம்மா”

“கண்ணின் மணியில் ஒளிவிடும் மெய்ப்பொருளே – கண்ணண் என்றும் கண்ணம்மா என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது”

அது ஆண்பால் – பெண்பால் தன்மையைத் தாண்டி பேசப்பட்டிருக்கின்றது

“கண்ணில் இருக்கும் பார்வையின் சத்தியே – பராசக்தி ” என்று தேசியக் கவி பாரதி பாடுகின்றான்.

கண்ணகி மதுரையை எரித்தாள் என்றால் – கண்ணிலிருக்கும் பார்வையின் சத்தி மதுரையை தீக்கிரையாக்கியது என்று பொருள். ஒரு பெண் எரித்தாள் என்பதல்ல

கண்ணன் லீலைகள் ;

1 கண்ணன் ஆலிலையில் துயின்றான் என்றால் : கண்ணன் ஆலிலை போன்று இருக்கும் கண்ணில் இருக்கிறான் என்று பொருள் எடுக்க வேண்டும்

2. கண்ணன் காளிங்கன் மீது நடனம் ஆடினான் என்றால் – அவன்  5  இந்திரியங்களை அடக்கி ஆண்டான்  என்று பொருள்.

3. கண்ணன் யமுனை நதியில் ஆடினான் என்றால் – கண்ணின் ஒளியானது மேலேறி ” ய” காரமாகிய சுழிமுனையில் – எட்டிரண்டும் கூட்டி வரும் பத்தாகிய ய” காரத்தில் ஆடுகின்றது என்று பொருள் எடுக்க வேண்டுமே அல்லாது ஒரு மனிதர் ஆடினார் என்று பொருள் எடுக்கக் கூடாது.
யமுனை என்பது புறத்தில் ஓடும் நதி அல்ல

4. மேலும் கண்ணன் = ஆன்மா ஆகும் – அதனால் தான் இவ்வளவு சக்திகள் அதுவுக்குள் அடக்கம் – ஏன் அண்ட சராசரங்களும் தான் – இதனால் தான் , யசோதா உணவு ஊட்ட கண்ணன் வாய் திறந்த போது – அகில உலகமும் ஏன் அண்ட சராசரங்களும் அதற்குள் இருந்தன
ஆனால் கண்ணன் = விஷ்ணு அல்ல – அவர் மும்மூர்த்திகளுள் ஒருவர்

ஆன்மா எல்லாவற்றுக்கும் மேலானது – முத்தொழிலுக்கும் மேலானது

ஆன்மா 36 தத்துவங்களுக்கு மேல் நிற்கின்றது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s