19.2.15
திருப்பாவை – திருவெம்பாவை – சன்மார்க்க விளக்கம்
வழி வழி வந்த நம்பிக்கைபடி :
திருமணம் ஆகாத கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொண்டால் , அவர்களுக்கு ஏற்றாற் போல் மணமகன் வந்து கரம் பிடிப்பான் என்பது நம்பிக்கை
நம்பிக்கை வந்ததன் பின்னணி :
ஆண்டாள் இந்த நோன்பை மேற்கொண்டு தான் ரங்கனை கரம் பிடித்தாள் என்பதனால் , எல்லா கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள்
ஆண்டாள் , தான் தொடுத்த பூமாலையை தினமும் சூடிப் பார்த்து , கண்ணாடியில் அழகு பார்த்து – திருவடியின் அழகு பார்த்தும் இரசித்துப் பின் அதனை ரங்கனுக்கு அனுப்பி வைப்பாள்.
எல்லோரும் , ஏன் அவளது வளர்ப்பு தந்தை பெரியாழ்வார் கூட அவள் அழகைத் தான் கண்ணாடியில் பூச்சூடி ரசிக்கின்றாள் என்று நினைத்தனர்.
ஆனால் உண்மை என்னவெனில் – அவள் தன் அழகை ரசிக்கவில்லை – கண்ணில் தெரியும் திருவடியின் அழகை பூச்சூடி ரசித்தாள்.
கண்மணியில் இறைவன் திருவடிகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை
திருவள்ளுவர் கூறியபடி இந்த திருவடிகளைப் பிடித்தால் தான் , பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க முடியும் – பொற்சபை – சிற்சபைக்குள்ளும் -பொன்னம்பலத்திற்குள்ளும் சிற்றம்பலத்திற்குள்ளும் நுழைய முடியும் என்பது திண்ணம்
அதனால் தான் திருவடிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வள்ளலார் -” திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை – திருவடிப் பேறு ” என்றெல்லாம் அதனை உயர்த்தி பெருமை பேசுகின்றார்.
எனவே திருப்பாவை – திருவெம்பாவை என்பது கண்மணியில் துலங்கும் திருவடிகளின் பெருமை- வல்லபம் பற்றிய பாக்களே அல்லாது வேறில்லை
தேசியக் கவி பாரதியின் கவிகளில் வரும் கண்ணன் – கண்ணம்மா என்பதுவும் கண்மணிகளைக் குறிக்க வந்த பாடல்களாகும் – புறத்திலே இருக்கும் மனிதர்களை அல்ல என்பது முற்றிலும் உண்மை
வெங்கடேஷ்
ஐயா, தங்கள் பதிவுகள் அற்புதமாக உள்ளன. அடியேனும் சி.வ.செல்வராஜ் ஐயாவிடம் நயன தீட்சை பெற்றுள்ளேன். பயிற்சி சுமாராக செய்கிறேன். உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? சில சந்தேகங்களை தெளிவு பெற்றுக் கொள்வேன். அன்புடன் – முத்து நாகராஜன்.
LikeLike
Pl call 9600786642
LikeLike