திருவடிப் பெருமை – 5
வெறும் பூஜ்ஜியங்களைப்
போட்டுக்கொண்டே போனால்
ஒரு மதிப்பும் இன்று போல்
நம் வாழ்வில் தேடிடும்
கல்வி – செல்வம் – இன்பம் யாவும்
நிறைய பூஜ்ஜியங்களின் வரிசை போலும்
ஒரு மதிப்பும் இன்று
பூஜ்ஜியத்திற்கு முன்னால்
ஒன்று என்ற எண் போட்டால்
மதிப்பு எகிறுவது போல்
நம் வாழ்வில் சாதனையில்
திருவடியின் இணைப்பினால்
ஒருமை அருள் உண்டாகில்
பூஜ்ஜியங்களுக்கு முன்னால்
ஒன்று எண் போட்டது போலாகும்
நம் வாழ்விற்கும் அர்த்தம் வரும்
சாதனையில் வழியும் முன்னேற்றமும் கிடைக்கும்
ஒருமை நிலை
நம்மை ஏறா நிலைமிசை ஏற்றி வைக்கும்
வெங்கடேஷ்