ஞான யோக அனுபவ படிகள்- நிலைகள் & ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்
வள்ளலாரின் தொண்டர்களால் விவரம் சேகரிக்கப்பட்டு உரை நடையில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி தகவல் :
1. ஸ்படிக மேடை
2.ஓம்கார பீடம்
3. துவஜஸ்தம்பம்
4.குண்டலி வட்டம்
5. 1008 இதழ் கமலம்
6. சுத்த நடனம்
இதில்
2.ஓம்கார பீடம் = பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளின் கூட்டு கலவையால் ஏற்படும் அனுபவம்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : எல்லா நிற மணிகள் – முத்து, நீலம் , பச்சை , பவளம் போன்றவைகளின் கலவை என்று வள்ளலார் இதனை குறிப்பிடுகிறார்.
3. துவஜஸ்தம்பம் = சுழிமுனை நாடியினுள் விந்துவும் பிராணனும் கலந்து மேலேறும் அனுபவம்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : ஏழ் நிலை மேலிருந்ததோர் ” ஸ்தம்பம் ” என்று வள்ளலார் இதனை குறிப்பிடுகிறார்.
4.குண்டலி வட்டம் = குண்டலி தன் விஷ முகத்தால் சுழிமுனை( பிரமரந்திர ) துவாரத்தை மூடிக் கொண்டிருப்பதை குறிப்பதுவாகும்
5. 1008 இதழ் கமலம் – ஆன்மாவின் இருப்பிடத்தைக் குறிக்க வந்ததாகும் – சஹஸ்ராரம் – நிராதாரம் ஆகும்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : கொடுமுடி மேல் 1008 மாற்றுப் பொற்கோவில் இருந்ததடி என்று இதனை குறிப்பிடுகிறார் வள்ளலார்
1008 மாற்றுப் பொற்கோவில் = ஆன்மாவின் இருப்பிடம் , ஆன்ம நிலையம்
6. சுத்த நடனம் = ஆன்மாவுக்குள்ளே இறையின் இடைவிடா நடனம் நடந்து கொண்டிருக்கின்றது – பொன்னம்பலத்திலும் – சிற்றம்பலத்திலும்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : வள்ளலார் தன் அனுபவமாக
தாங்கும் அவளருளாலே நடராஜர் சன்னிதி கண்டேனடி – சன்னிதியில் சென்று நான் பெற்றது சாமி அறிவார்
BG Venkatesh