சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு

24.2.15

சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு

“அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைந்த வாசலும்
சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய்
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே”
( பாடல் 110 )

இதில்

1 நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இருதயக் குகை என்றும் அழைக்கின்றனர் – இதனைத் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது கிறித்தவ சமயம்.

ஆனால் உலகம் இருதயம் என்றால் – உடல் உறுப்பாகியய் இதயத்தை எண்ணுகிறது
அதனை எப்படி சுத்தம் செய்ய முடியும் ?? யோசிப்பீர்

இதனைத்த்தான் கீழ்ப் பச்சைத் திரை நீங்கினால் சுத்தர் புனிதர் ஆவோம் என்கிறார் வள்ளலார்.

2 ஞான வாசல் = பிரமரந்திரம் – பிரமப்புழை – சுழிமுனை திறந்து உள்ளே சென்று, ஆன்ம தரிசனம் முடிந்த பிறகு

3 எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே = சிற்றம்பல கதவின் வாசல் திறந்து உள்ளே சென்றவர் இனி பிறக்க மாட்டார் என்று உரைக்கின்றார் சிவவாக்கியர்

இந்தக் கருத்தையே ஒற்றி எடுக்கிறார் வள்ளலார் ” ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் -”

“நடராஜர் சன்னிதி கண்டேனடி
சன்னதியில் சென்று நான் பெற்றது
சாமி அறிவாரடி – அம்மா
சாமி அறிவாரடி”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s