ஒருமை
ஒருமை = ஆன்மா – மௌனம்
= மனம் அழிந்த நிலை
= சும்மா இருப்பது
= ஜீவ போதம் ஒழித்து சும்மா இருப்பது
= எல்லாம் சுபமாக தானாகவே நடப்பது
ஜீவன் தன் உடல் பொருள் ஆகியவை சிவத்திடம் / ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு சரணடைவது
ஜீவன் தன் ஜீவ சுதந்திரம்
தேக சுதந்திரம்
போக சுதந்திரம் சிவத்திடம் விட்டுவிடல்
வள்ளலார் :
என்னை ஏறா நிலை மிசை ஏற்றியது யாதெனில் தயவு
அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்
1. ஒருமை இருந்தால் தான் தயவு வரும் – தயவு வந்தால் பெரிய நிலை மேல் ஏறலாம்.
ஏறா நிலை மிசை ஏற்றி எந்தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி
ஏறா நிலை ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருட்பெருஞ்சோதி
இங்கு ஒருமை, ஏறா நிலை என்பது 36 தத்துவங்களையும் தனித்தனியாக கடந்து ஆன்மாவை அடைவதாகும்
ஒருமை = ஆன்மா , SINGLE , தனிக்குமரி
ஒருமை என்பது எண்ணமற்ற, மனமற்ற மனமிறந்த நிலை. ஒருமை என்பது ஆன்மா செயல்படும் நிலை.ஒருமையில் இருந்தால் 5 இந்திரிய சத்திகளும் மூலத்தில் சேர்ந்துவிடும்.
அப்போது ஜீவ ஒளி வாசியுடன் கூடி சுழிமுனையில் மேலேறி ஆன்மாவுடன் கலக்கும்
ஜீவன் மேலேறும் போது ஒவ்வொறு தத்துவமாகக் கழலும்.36இம் கழலும்.
அப்போது ஜீவனிலிருக்கும் ஆசை, கோபம் , மோகம், ராக துவேஷங்கள் யாவும் அற்றுப் போகும். ஜீவன் சுத்தன் – புனிதன் – புருஷோத்தமன் ஆகும்
வள்ளலார் பேருபதேசத்தில் கூறும் கீழ் பச்சைத் திரை விலக்கம் இதுதான்.
வாசியுடன் கலந்த ஜீவன் சுழிமுனையில் மேலேறி , பிரமத்துவாரம் புகுந்து, மலங்களை அழித்து ஆன்மாவுடன் கலக்கும்.
ஜீவன் மேலேறும் போது உலக வாழ்வு, மாயை, கர்மம் ஆகிய மலங்களும் அற்றுப் போகும்
உடல் , மனம் ஜீவன் செயல்பாடு இல்லை
வெறும் மௌனம் – மௌனம் – மகா மௌனம் – ஆன்மா
இந்த நிலை ஜீவன்முத்தி நிலை – மோன நிலை
இந்த ஒருமை நிலையில் சிவம் தன் அருட்சக்தியுடன் வந்து ஆன்மா மீது அமர்ந்து கொள்ளும்.
அந்த சத்தினிபாதத்தால் ஆணவ மலமும் கழியும்
வெங்கடேஷ்