கதம்பக் கட்டுரைகள் – 13
1 சுத்தாவத்தை :
இதனைப் பற்றி முன்னர் எழுதி இருந்தமையால், இதனை விளக்க, இது எழுதப்படுகின்றது
பிறந்தும் இறந்தும் உழல்கின்ற சகலராகிய ஆன்மாக்கள் இருவினை ஒப்பும் சத்தினிபாதமும் உறுதலால் சிவக்னான குரு சேவையும் அருளும் பெற்று சனன மரண நீங்குதற்கு எதுவாகிய ஞாய யோகமடைந்து , ஞானத்திற்கு தடையாகிய மும்மலங்கள் நீங்கி, சிற்றுணர்வு தீர்ந்து ஞானம் பெருகச் சிவபெருமான் திருவருள் கூடுதல் சுத்தாவத்தை ஆகும்
2 தடுத்தாட் கொள்வது – உண்மை விளக்கம்
நாம் எல்லோரும் திருவருட்செல்வர் தமிழ் படத்தில் – சுந்தரரை, திருமணம் நடை பெறாமல் தடுத்து சிவப் பணிக்கு கூட்டிச் செல்வார் சிவபெருமான்
உண்மையில் அதன் பொருளானது என்னவெனில் – பஞ்ச இந்திரியங்களை பஹிர் முக விவகாரத்தில் செலுத்துவதைத் தடுத்து , திருவடிகளைக் காட்டி, அவற்றைக் கொண்டு இருதயக் குகையை திறந்து , அதில் சாதகனை நுழைய வைப்பதே தடுத்தாட் கொள்வது என்னும் ஆட்கொள்வதாகும்
3 தவம்:
சாதகன் திருவடிகளக் கொண்டு , அதிலுள்ள நாத விந்து கலைகளை வெளிப்படுத்தி, அவற்றின் துணையினால்,பஞ்சேந்திரியங்களின் ஒளிகளையும், சோமசூரியாக்கினிகளின் ஒளிகளையும் ஒன்றாக்கி, அவைகள் பிரகாசிக்க , அவற்றின் மத்தியில் சரீரம் நிற்க, அசையா நாட்டத்துடன் சிவத்தின் பால் சித்தத்தை விட்டு நிற்பதே உண்மையான தவமாகும்
வெங்கடேஷ்