நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே
நிறைந்து நிறைந்தூற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
( பாடல் 1 – 28இல் )
இதில் முதல் 2 வரிகள் உள்ள மெய்ப்பொருள் ஆனது :
திருவடிகளை இணைத்தால் அகம் குழையும் – கண்கள் நீர் சொரியும் உடல் அதனால் நனையும். அந்த அனுபவத்தை விலாவாரியாக விளக்குகிறார் வள்ளல் பெருமான்.
இந்த பாடலின் விளக்கம் கூற வருபவர்கள் : வள்ளலார் இறைவனின் பெருமையையும் , தனக்கு செய்த பேருதவிகளையும் நினைத்தார். அதனால் கண்ணீர் உகுத்தார் என்று விளக்கம் அளிக்கின்றனர்
2 பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே – மிக முக்கியமான வரிகள் இவை
பொற்சபை சிற்சபை எது எங்கிருக்கிறது என்று கேட்டால் – இரண்டு கண்கள் தான் அவைகள் – சத்திய ஞான சபையின் அமைப்பு வைத்து இவ்விளக்கம் அளிக்கின்றனர்.
இரண்டு கண்களில் புகுவது தானா வள்ளலார் சொல்வது என்று கேட்டால் – பதில் இல்லை
பொற்சபை சிற்சபை என்பது ஆன்மாவுக்கு மேல் உள்ள பரவெளிகளாகும்.
ஆன்மாவின் இருப்பிடம் – துவாதசாந்தப் பெருவெளி – 12 ஆவது நிலைப் படி , உடம்பில் – நெற்றி நடு ( புருவ மத்தி அல்ல )
பொற்சபை – பொன்னம்பலம் – 14/15 ஆவது நிலைப் படி – ஆன்மாவிற்கு மேல் உள்ள வெளிகள் – நெற்றி நடுவுக்கு மேல் – உள்புறம்
சிற்சபை – சிற்றம்பலம் – 16 ஆவது நிலைப் படி – ஆன்மாவிற்கு மேல் உள்ள வெளிகள் – – நெற்றி நடுவுக்கு மேல்- உள்புறம்
ஞான சபை – 17 ஆவது நிலைப் படி – சுத்த சிவதுரியாதீதம் என்று குறிப்பிடுகின்றார் பெருமான்
பொற்சபையில் சிற்சபையில் எப்படி புகுவது என்று கேட்டால் – நம் உணர்வானது ஜீவ ஒளியானது அணுவைக் காட்டிலும் நுண்மை அடைந்தால் தான் பொற்சபை சிற்சபையினுள் நுழைய முடியும் எனப்து திண்ணம்
வெங்கடேஷ்