திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத்துவாரத்தை நோக்கி முற்
காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

மூலத்துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம்

மேலைத்துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம்

இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் :

திருவடி கொண்டு சுழிமுனை வாசலைத் திறந்து அபானனை அதனுள் செலுத்தி , மேல் கொண்டு வந்து , சுழிமுனைக்கு கொண்டு வருவது அங்கி யோகம் என்று பெயர் – அவர் உலக பிரக்ஞையற்று இருப்பர்.

2. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்திது தானே

மூலத் துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம்

மேலைத் துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம்

இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் :

சுழிமுனைத் துவாரத்திலேயே மனமும் கண்களும் லயித்து அசைவற்று நோக்கியிருந்தால் – யமனை – காலத்தை வெல்லலாம்

வெங்கடேஷ்

2 thoughts on “திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

  1. 2015 இல் இருந்து தங்கள் தளத்தைப் பார்த்து வருகிறேன் ,

    வரிக்குவரி சொல்லுக்குச் சொல்
    எனது அனுபவங்களாக உள்ளன.

    இது எப்படி சாத்தியமாகும்
    ஆச்சரியமாக இருக்கிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s