அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம்
1 முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தகவு என்ற என் அருட்பெருஞ்சோதி ( 250 )
இங்கு முத்தி – மூன்று தீக்களாகிய சோமசூரியாக்கினி கலைகளைக் குறிப்பதாகும்.
இம்மூன்று தீக்களை சாதனை மூலம் இணைப்பது தான் முதலில் செய்ய வேண்டிய சாதனம் ஆகும் என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்
இங்கு இதனை கூறிவிட்டு உரை நடையில் – சுத்த சன்மார்க்க சாதனம் என்றால் – பரோபகாரமும் சத்விசாரம் என்று முடிவு பண்ணி – இதனையே செய்து கொண்டு , சாதனையை செய்யாமல் இருக்கின்றனர்
அகவல் என்பது வள்ளலாரின் அனுபவப் பிழிவு- சாரம் ஆகும் – எனவே இதனை ஏற்பது தான் சாலச் சிறந்தது
இந்திரிய ஒழுக்கம் கைவரப்பெற்று முழுதும் கைவல்லியம் ஆனால் தான் முத்தீக்களும் கூடும்
2 சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத்திறல் என்ற என் அருட்பெருஞ்சோதி ( 252 )
சித்தி என்பது முத்தி என்னும் முப்பூவை முடித்த பின்னால் ஒரு சாதகனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ஆகும்
ஆக முதலில் முத்தி – முத்தீ – முப்பூ முடித்தல் என்னும் சாதனம் , அதன் பின் சித்தி என்னும் அனுபவம் – இந்த அனுபவங்கள் முதிரும் போது அது அருட்பெருஞ்சோதி என்னும் நிலைக்கு அழைத்துச் செல்லும்- திருச்சிற்றம்பலத்திற்கும் அழைத்துச் செல்லும்-
வெங்கடேஷ்