அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
கற்பகம் என் உளங்கை தனில் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்சோத் ( 272 )
கற்பகம் – கற்புடைய அகம்
– நினையாத மன நிலை
– எண்ணமில்லா மன நிலை
– மனனமில்லா மனோ நிலை
இது எப்போது சாத்தியம் ஆகும் எனில் கண்கள் முற்றும் உலக காட்சிகளை துறந்து உள்ளே லயிக்கும் போது ஆகும்
மனம் ஏதாகிலும் ஒரு காட்சி – உருவம் பற்றிக்கொண்டு சதா அதைப் பற்றி நினைக்கின்றது.
எல்லாம் அருவமாக மாறிவிட்டால் மனதால் செயல் பட முடியாது – அப்போது அது அதன் நினைக்கும் குணத்தை விட்டுவிடுகின்றது.
மனம் அமைதி – சாந்தம் அடைந்து விடுகின்றது
அற்புதம் இயற்றெனும் – எண்ணமில்லா மன நிலை, மனனமில்லா மனோ நிலையால் மனதிற்கு சக்தியும் ஆற்றல் பல்கி பெருகி பல அற்புதங்களை செய்ய முடியும் – அதனைத் தான் சமயம் – கேட்டதைக் கொடுக்கும் கற்பக – கல்ப விருக்ஷம் என்னும் மரமாக சித்தரித்து சொல்கிறது
திரண்ட கருத்து :
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு மனனமில்லா மனோ நிலையைக் கொடுத்து அற்புதங்களை இயற்றச் செய்தார்
வெங்கடேஷ்