சன்மார்க்கத்திலும் சடங்குகள் ???
சமய மதங்களிலும் தான் எதுவானாலும் சடங்காகி மாறி விட்டது – எந்த ஒரு பண்டிகை – திருவிழா வானாலும் அதன் உட்கருத்து தெரியாமல் வெறும் சடங்காகவே செய்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை
அந்த நோய் இப்போது சன்மார்க்கத்திலும் பரவி வருகின்றது
I சன்மார்க்க சங்கத்தவர் அனேகர் வெள்ளை ஆடை உடுத்துகின்றனர் – மகிழ்ச்சி தான்
வருத்தம் என்ன வென்றால் – எதற்கு வெள்ளை ஆடை என்றால் விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்
வெள்ளை ஆடையின் தத்துவம் – யார் வெள்ளை ஆடை அணியலாம் என்றால் – யார் ஒருவர் தாங்கள் அனுபவத்தில் சுழிமுனை அனுபவத்திற்கு வந்து விட்டவர்களோ அவர்களே வெள்ளை ஆடை அணியத் தகுதி உடையவர்கள் ஆவார்கள்
காரணம் :
உலக நோக்கம் – உலக மயம் = வண்ண மயமானது – எல்லா நிறங்கள் – அசுத்தம் ( சாதாரண உலகத்தவர் )
அக நோக்கம் – சுழிமுனை அனுபவத்தில் இருப்பவர்
வெள்ளை நிறம் – எந்த ஆசையும் இல்லை – சுத்தம்- அது transparent – எந்த கருமம் – மாயையும் மயக்கும் இல்லை என்பதை உலகிற்கு சொல்லாமல் சொல்லவே இந்த ஆடை
II சன்மார்க்கதவர் அனேகர் வெள்ளைதலைப்பாகை அணிகின்றார் . எதற்கு என்று வினவினால் பெரும்பாலானவருக்கு தெரியவில்லை – சிலரோ தலையில் இருக்கும் சத்து காய்ந்து போககூடாது என்று பதிலுரைக்கின்றார்.
கீழிலிருந்து சத்து ( விந்து சக்தி ) சிரத்திற்கு வந்திருந்தால் தானே – அது காய்ந்து போகாமல் இருப்பதற்கு பாகை அணிய வேண்டும் — உங்களுக்கு அந்த பயிற்சி தெரியுமா என்று கேட்டால் , நகைக்கின்றனர்
யார் கீழ் நிலை சுக்கிலத்தை மேல் நிலை சுக்கிலமாக மாற்றும் பயிற்சியில் உள்ளவரோ, தெரிந்தவரோ அவரே வெள்ளை தலைப்பாகை அணியத் தகுதி உடையவர் ஆவார்.
இதெல்லாம் தெரியாதவரும் செய்யாதவரும் வெள்ளை தலைப்பாகை அணிவது ஏன் ??
அதனால் இது வெறும் சடங்காகி விட்டது என்று கூறுகிறேன்
அதனால் வெள்ளை ஆடை – வெள்ளை தலைப்பாகை அணிவது யாவும் வெறும் சடங்காகி விட்டது
வெங்கடேஷ்