உண்மையான பிராணாயாமம் – எது???

உண்மையான பிராணாயாமம் – எது???

நம்மில் நிறைய பேர் அதிகாலையில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்கின்றோம் . எப்படி ??

கைவிரல்களை மூக்கில் வைத்து , ஒரு துவாரம் வழியாக மூச்சு உள்ளிழுத்து மற்றொறு துவாரம் வழியாக வெளியே விடுகின்றோம்
– இது தான் பிராணாயாமம் என்று நம்பிக்கை வைத்து செய்து வருகின்றோம்

இதற்கு மதிப்பு கூட்டும் வகையில் – மூச்சு உள்ளிழுப்பதற்கு ஒரு மாத்திரை நேரம் = உள்ளே நிற்க வைக்க இவ்வளவு நேரம் – வெளியே விட இவ்வளவு நேரம் என்று ஒரு கணக்கில் செய்வது ஆகும்

உண்மையில் நாம் செய்வது தான் பிராணாயாமமா ?? இல்லவே இல்லை எனலாம்

நாம் செய்யும் பயிற்சியானது உடலில் பிராணனின் அளவை அதிகப் படுத்தி அதனால் நன்மைகள் விளையுமே அல்லாது , அது பிராணாயாமம் ஆகாது

பிராணாயாமம் = பிராணனை அசையாமல் நிறுத்துவது ஆகும்
யாமம் = நிறுத்துவது

பிராணன் எங்கிருக்கின்றது ?? பிராணன் சிர நடுவில் – நெற்றி நடுவில் இருக்கின்றது

பிராணன் = உயிர் – ஆன்ம ஒளி ஆகும்

பிராணனை எப்படி நிறுத்துவது ?? திருவடியின் சகாயத்தினால் அல்லாது இது சாத்தியமே இல்லை என்பது உறுதி

திருவடி கொண்டு தவம் – சாதனம் செய்யும் போது , உடலுக்கு செல்லும் அபானன் கீழே நுரையீரலுக்கு செல்வது தடுக்கப்பட்டு , சுழிமுனை நாடியில் மேலேறி பிராணனை வந்தடைகின்றது = அப்போது பிராணனின் அசைவு ஒழிகிறது

அதனால் சமாதி கூடுகின்றது

இதுவே உண்மையான பிராணாயாமம் ஆகும்

பழக பழக – இப்படி மூச்சு மேல் செல்வது தானாகவே நடைபெறும் நம் முயற்சி இன்றியே

மேல் செல்லும் மூச்சிற்கு பெயர் தான் வாசி . இது அவ்வளவு எளிதில் நடைமுறைக்கு வருவதில்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s