ஜீவப்பிரம்ம ஐக்கியம்
சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம்
அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம்
அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே
அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே – அழுக்கு போக தினம் குளித்து அழுக்கு நீங்கப் பெறாதவர்களே
அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் = அழுக்கு எங்கிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் = இடத்தை தெரிந்து அழுக்கு இருந்த இடத்தை சுத்தம் செய்தீர்களானால்
எப்படி அழுக்கு நீக்குவது ??
நாம் சாதனம் செய்யுங்கால் , திருவடிகள் நம் விந்துவிலிருக்கும் எல்லா கெட்ட குணங்களையும் அப்புறப்படுத்திவிடும் – சுப குணங்கள் மேலோங்கும் –
நம் இரத்தத்திலிருக்கும் ஜீன்கள் , குரோமோசோம்கள் எல்லாம் நல்லதிற்கு மாறி நாம் சுத்தன் – புனிதன் – புருஷோத்தமன் ஆவோம்
அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே = அழுக்கில்லா ஆன்மா மற்றும் அருள் ஜோதியோடு கூடுதலும் ஆகுமே
திரண்ட கருத்து :
ஜீவன் அழுக்கி நீங்கி சுத்த ஜீவனானால் , அது ஆன்மாவுடன் கலக்கும்
வெங்கடேஷ்