ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2
திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி
என் பொன்மணியை எய்த வொண்ணாதே
அன்போடு உருகி = நாம் சாதனையில் இரு கண்களையும் இணைத்து பயிற்சி செய்தால் அதனால் மனம் காணாமல் போய், அகம் குழையும் உருகும்
அன்பு என்பது , உலக நோக்கில் –
ஒருவருக்கு செய்யும் உதவி, ஒருவருக்கு காட்டும் கரிசனம் – கணவன் மனைவி இடையே இருக்கும் காதல், தந்தை தன் பிள்ளைகளிடத்தில் காட்டும் பரிவு, அக்கறை என்பதெல்லாம் அல்ல
அன்பு என்றால் அகம் – உள்ளம் உருகுதல் , குழைதல் ஆகும் – இது சாதனையில் தான் நடக்குமே அல்லாது வேறெதனாலும் நடைபெறாது .
ஜீவகாருண்யம் என்று கூறிக்கொண்டு சோறு போட்டுக்கொண்டே இருந்தால் மட்டும் அன்பு வராது – அத்தோடு பயிற்சி , சாதனைகள் செய்து , அதில் வெற்றி கண்டால் தான் அன்பு என்னும் பூ மலரும்
அதனால் அளப்பெரும் நன்மைகள் உண்டு என்பதை சன்மார்க்கிகள் அறியவில்லை
இன்றைக்கு சன்மார்க்கம் என்றால் ஜீவகாருண்யம் , ஜீவகாருண்யம் = சோறு போடுதல் என்ற அளவிலேயே விளங்கி வருகின்றது – அதனால் சன்மார்க்கம் வளராமலேயே போய்விட்டது .
இந்த அன்பு மலர்ந்து அகம் உருகி குழையும் நிலை வந்தால் தான் , நாம் ஆன்ம அனுபவமும் அருள் அனுபவமும் கூடி நாம் எல்லா சித்தி வகைகளும் கைவரப் பெற்று நாம் சிவத்துடன் கலந்து மரணமில்லாப் பெருவாழ்வு அடைய முடியும் என்று இந்த திருமந்திரப் பாடல் விரித்து உரைக்கின்றது
அன்பு மலர்வதற்கு கண்கள் மிக மிக அவசியம் எனப்தை சன்மார்க்கிகள் உணர வேண்டும்
என் பொன்மணி = சிவம்
வெங்கடேஷ்