மெய்யருள் வியப்பு – 27

மெய்யருள் வியப்பு – 27 என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே புலயனேனுக்குக் அளித்த கருணை மிகவும் பெரியதே ( பாடல் 27 ) என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் – ஜீவனுக்கு மேலாம் தலைவனும் உற்ற துணையாம் ஆன்மாவைப் பாராட்ட என்ன தவம் செய்தேன் பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – பிரம்மன்…

மெய்யருள் வியப்பு – 26

மெய்யருள் வியப்பு – 26 கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே அருள் நாடகஞ்ச் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே ( பாடல் 23 ) கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே = சுத்த சிவமாகிய கருணாநிதியைக் காணக் கண்கள் ஆசைப்படுகின்றதாம் காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே = சுத்த சிவமாகிய…

மெய்யருள் வியப்பு – 25

மெய்யருள் வியப்பு – 25 அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே எனக்கும் நின்மேலன்றி உலகில் இச்சை இல்லையே ( பாடல் 6 ) அப்பா = ஆன்மாவைக் குறிக்க வந்த பதமாகும் அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே – வள்ளல் பெருமானுக்கு ஆன்மாவை விட்டால் உலகில் வேறு…

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் சுத்த சன்மார்க்க சாதனம் – பயிற்சி என்பது கண்களைக் கொண்டு செய்வதாகும் – கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தவம் செய்வதாகும் இதனைத் தான் வள்ளலார் ” என் கண்மணியுள் இருக்கும் தலைவா நின்னைக் காணவே என்ன தவம் செய்தேன் ”  என்று மெய்யருள் வியப்புவில் பாடுகின்றார் இதனையே பட்டினத்தாரும் அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை நித்தனை அம்மை சிவகாம சுந்தரி  நேசனை கூத்தனை பொன்னம்பலத்தாடும் ஐயனை காணக் கண்கள் எத்தனை…

மெய்யருள் வியப்பு – 24

மெய்யருள் வியப்பு – 24 கடையேன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே கனியதாக்கித் தூக்கிக் கொண்டாய்த் துரியத் தெல்லையே உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்றோங்குன் தலத்திலே உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்திலே ( பாடல் 76 ) கடையேன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே கனியதாக்கித் தூக்கிக் கொண்டாய்த் துரியத் தெல்லையே என்பது வள்ளல் பெருமான் தன் சாதனையால் ( கண்கள் கொண்டு செய்யும் பயிற்சி ) கல் போன்ற…

மெய்யருள் வியப்பு விளக்கம் – 23

மெய்யருள் வியப்பு விளக்கம் – 23 சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற்பாதமே உலக விடயக் காட்டில் செல்லாதெனது போதமே ( பாடல் 60 ) சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே – வள்ளல் பெருமானுக்கு பிறப்பிறப்பு என்னும் அவத்தை நீக்கப்பட்டுவிட்டதாம் தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே – ஆன்மாவின் அருளால் அவருக்கு அமுதம்…

ஆன்ம தரிசனம் – 3

ஆன்ம தரிசனம் – 3 1 பூதகளற்று பொறியற்று சாரைம்புலங்களற்று பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்னற்று காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதங்களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே 2. இல்லந்துறந்து பசிவந்த போதங்கி ரந்து நின்று பல்லும் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமற்று சொல்லும் பொருளுமிழந்து சுகானந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே 3. சிந்தனையற்று பிரியமுந்தானற்று செய்கையற்று நினைந்ததுமற்று நினையாமையுமற்று நிர்ச்சிந்தனாய்த் தன்னந்தனியே இருந்தானந்த நித்திரை தங்குகின்ற அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே மேற்கூறிய…

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் – 2

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் 2 பட்டினத்தார் பாடல் – கச்சி ஏகம்ப மாலை 1 ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சீரும் சதமல்ல செல்வமும் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல நிந்தாள் சதம் கச்சி யேகம்பனே 2 அடியார்க்கு எளியவராம் அம்பலவாணரடி பணிந்தால் மடியாமல் செல்வவரம் பெறலாம் – வையம் ஏழளந்த நெடியோனும் வேதனும் காணாத நித்த நிமலனருள் குடிகாணும் நான்களவர் காணும் எங்கள் குலதெய்வமே இந்த இரு…

மாயை – விளக்கம்

மாயை – விளக்கம் நாம் எல்லோரும் அறிந்தது ஒவ்வொரு ஜீவனும் மும்மலப் பந்தப்பட்டுள்ளது என்பதை மும்மலம் – மாயை – கன்மம் – ஆணவம் மாயை என்றால் என்ன ?? மாயை என்றால் – 1. உள்ளதை உள்ளபடி காட்டாமல் மறைப்பது – உண்மையை தெரியவொட்டாமல் மறைப்பது 2. உள்ளதை உள்ளபடி காட்டாமல் திரித்து கூறி – பொய்யைக் காட்டி அதனை உண்மையென்று நம்ப வைத்து அதிலேயே நம்மை ஆழ்த்தி வைத்திருப்பது ஆகும் 3. மாறிக் கொண்டே…

மெய்யருள் வியப்பு – 22

மெய்யருள் வியப்பு – 22 என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே முன்னி மகிழ்ந்து பாட ப் புரிந்தாய் அடிமை என்னையே ( பாடல் 54 ) என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே – ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகளை நீக்கி என்னை ( ஆன்மாவைக் காட்டி ) இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம்…