மெய்யருள் வியப்பு – 22
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே
முன்னி மகிழ்ந்து பாட ப் புரிந்தாய் அடிமை என்னையே ( பாடல் 54 )
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே – ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகளை நீக்கி என்னை ( ஆன்மாவைக் காட்டி )
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே – ஆன்மாவிற்குள் இருக்கும் சிவத்தைக் காட்டினாய் – ஆகாய கங்கையாம் அமுதம் ஊட்டினாய்
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே முன்னி மகிழ்ந்து பாட ப் புரிந்தாய் அடிமை என்னையே – நான்மறைக்கும் எட்டா நிலையில் இருக்கும் ஆன்மாவின் பெருமை பாட வைத்தாய் , என்னை உனக்கு அடிமை ஆக்கியே என்று ஆன்மாவின் பெருமையையும் வல்லமையும் வள்ளல் பெருமான் பாடுகின்றார்
திரண்ட கருத்து :
ஜீவனுக்கு , ஆன்மா மாயை கன்மம் என்னும் மலங்களை – திரைகளை நீக்கி தன்னை வெளிப்படுத்தி – அதனுளிருக்கும் சிவத்தைக் காண்பித்தது என்று ஆன்மாவின் பெருமையைப் பாடுகின்றார்
வெங்கடேஷ்