மெய்யருள் வியப்பு விளக்கம் – 23
மெய்யருள் வியப்பு விளக்கம் – 23 சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற்பாதமே உலக விடயக் காட்டில் செல்லாதெனது போதமே ( பாடல் 60 ) சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே – வள்ளல் பெருமானுக்கு பிறப்பிறப்பு என்னும் அவத்தை நீக்கப்பட்டுவிட்டதாம் தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே – ஆன்மாவின் அருளால் அவருக்கு அமுதம்…