ஆன்ம தரிசனம் – 3
1 பூதகளற்று பொறியற்று சாரைம்புலங்களற்று
பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்னற்று
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங்களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே
2. இல்லந்துறந்து பசிவந்த போதங்கி ரந்து நின்று
பல்லும் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமற்று
சொல்லும் பொருளுமிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே
3. சிந்தனையற்று பிரியமுந்தானற்று செய்கையற்று
நினைந்ததுமற்று நினையாமையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தன்னந்தனியே இருந்தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே
மேற்கூறிய மூன்று வெண்பாக்களிலுமே பட்டினத்தடிகள் தான் இந்த பிரபஞ்ச வாழ்வை விட்டு, என்று ஆன்மாவில் திளைத்து , தோய்ந்து , மகிழ்ந்து இருப்பேன் என்று இறைவனிடம் வினவுகின்றார்
1 பூதகளற்று பொறியற்று சாரைம்புலங்களற்று
பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்னற்று
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே =
ஆன்ம தத்துவங்களை எல்லாம் விட்ட நிலை இங்கு குறிக்கப்படுகின்றது – இதையெல்லாம் விட்டு ஆன்மாவிலே என்று லயித்திருப்பேன் எங்கின்றார்
2. இல்லந்துறந்து பசிவந்த போதங்கி ரந்து நின்று
பல்லும் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமற்று
சொல்லும் பொருளுமிழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே –
என்பது வீடு வாசல் இழந்து – பேச்சுமிறந்து மௌனமுற்று, பொருளுமிழந்து ஆன்ம நிலையாம் தூங்காத தூக்கம் என்னும் சுகானந்தத் தூக்கத்திலே என்றிருப்பேன் என்று கேள்வி கேட்கின்றார்
3. சிந்தனையற்று பிரியமுந்தானற்று செய்கையற்று
நினைந்ததுமற்று நினையாமையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தன்னந்தனியே இருந்தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே –
இதில் மனமிறந்த நிலையைக் குறிப்பிடுகின்றார் – சிந்தனையும் செயலுமிழந்து ஆன்ம நிலையாம் ஆனந்த நித்திரை என்னும் தூங்காத தூக்கத்திலே என்றிருப்பேன் என்று கேள்வி கேட்கின்றார்
வெங்கடேஷ்