மெய்யருள் வியப்பு – 27
என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே
என்ன தவஞ்செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே
புலயனேனுக்குக் அளித்த கருணை மிகவும் பெரியதே ( பாடல் 27 )
என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் – ஜீவனுக்கு மேலாம் தலைவனும் உற்ற துணையாம் ஆன்மாவைப் பாராட்ட என்ன தவம் செய்தேன்
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – பிரம்மன் முதலாய மற்ற தேவர்களாலும் உன்னை அடைதல் அரிதாம்
புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே – மிகவும் கீழ் நிலையில் இருக்கும் எனக்கு காட்டிய கருணைத் திறம் மற்றும் அருள் மிகவும் பெரியது என்று வள்ளல் பெருமான் கூறுகின்றார்
வெங்கடேஷ்