மெய்யருள் வியப்பு – 29

மெய்யருள் வியப்பு – 29

உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே
தடையா தினி மூல மலத்தின் தடையும் போயிற்றே
சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமமதாயிற்றே ( பாடல் 36 )

உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே = வள்ளலாருக்கு தன் ஆன்மா அவர்தம் ஜீவனிடம் காட்டிய கருணை தயவை நினைக்கும் தோறும் உடம்பு பொன்மலை போல் பூரித்து பெருத்து மகிழ்கின்றாராம்

தடையா தினி மூல மலத்தின் தடையும் போயிற்றே = எல்லா மலத்தடைகளும் நீங்கியது

சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமமதாயிற்றே – சமய மத பேதங்கள் எல்லாம் நீங்கி எல்லாம் ஒன்று என்ற ஒருமை நிலை சித்தித்தது என் கின்றார்

திரண்ட கருத்து :

ஆன்மாவினால் மலத்தடைகள் எல்லாம் நீங்கியதும் , சமய மத பேதங்கள் எல்லாம் ஒழிந்து , ஒருமை என்னும் ஆன்ம நிலை சித்தித்தது என்று தன் அனுபவத்தை விளக்குகின்றார் வள்ளல் பெருமான்
BG Venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s