முத்திப் பேறு
முத்திப் பேறு சிவவாக்கியர் பாடல் காலைமாலை நீரிலே மூழ்கும் மந்த மூடர்காள் காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும் காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றினுள் ஒன்றிலே மூலமே நினைப்பாராகில் முத்தி சித்தி ஆகுமே திரண்ட கருத்து : சுத்தம் சுத்தம் என்று கூறிக்கொண்டு குளிப்பதெல்லாம் வெறும் சடங்கு மட்டும் தான் ஆகும். கண்கள் இரண்டையும் மூலத்தில் ஒன்றாக்கி பார்த்தால் , அதனால் சோமசூரியாக்கினி கலைகள் கூடி – முத்தீ அனுபவம் சித்திக்கும் என்று முத்திக்கு வழி வகை…