ஆன்ம தரிசனம் – மலக் கழிவு
சிவவாக்கியர் பாடல்
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர்காள்
கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லீரேல்
தோன்று மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே
திரண்ட கருத்து :
நாம் பிறந்த வாசலை எண்ணி எண்ணி ஏங்கிப் போகின்றோமே அல்லாது – சுழிமுனை நாடியின் வாசலைப் பற்றி சிந்திப்பதே இல்லை – அதனைத் திறந்து , நாடியின் உள்ளே நோக்கினால் , ஆன்ம ஒளி தோன்றும் அதனால் மலங்களாகிய மாயையும் வஞ்ச வினைகளும் ஒழிந்துவிடும்
ஆன்மாவின் சன்னிதியில் பிரவேசித்தால் மாயை மற்றும் கன்ம மலங்கள் இல்லை என்பது உண்மை
வெங்கடேஷ்