சிவயோகியர் தம் நிலையும் இயல்பும் – 4
சிவயோகியர் நிலையும் இயல்பும் – 4 சிவவாக்கியர் பாடல் உறக்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் சிறந்த ஐம்புலங்களும் திசைதிசைகள் ஒன்றிலென் புறமும் உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதுமில்லையே திரண்ட கருத்து : ஞானிகள் எந்த நிலையில் இருந்தாலும் – தூங்கிகொண்டிருந்தாலென்ன, விழித்திருந்தாலென்ன அவர்தம் உணர்வு சுழிமுனையில் ஒடுங்கி இருந்தாலும் தான் என்ன , அவர்கள் நினைப்பது ஒன்றுமில்லையே வெங்கடேஷ்