ஆறாம் திருமுறை – திருவருட்பேறு
1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரமனடம் புரியும்
பதியை அடைவித்தீர் அப்பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறைந்த மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர் அக்கோயிலிலே கோபுரவாயிலிலே
செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டி
திரும்பவும் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம் புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே
1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் – 36 தத்துவப் படிகளைக் கடக்கச் செய்தீர்
2 பரமனடம் புரியும் பதியை அடைவித்தீர் = ஆன்மா அசைவற நின்று கொண்டிருக்கும் சுழிமுனை துவாரத்திற்கு அழைத்து சென்றீர்கள்
3 அப்பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறைந்த மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர் – சுழிமுனை இடத்தை காட்டிகொடுத்தீர்
4 அக்கோயிலிலே கோபுரவாயிலிலே செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டி திரும்பவும் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
– சுழிமுனை உச்சியிலே இருக்கும் அடைப்பதனை திறப்பித்து திரும்பவும் மூடினீர் – அந்த அடைப்பை நீக்குதல் வேண்டும்
5 அடிகள் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே – என்னால் சிறிது நேரமும் பொறுத்துக்கொள்ள முடியாது விரைந்து வந்து இந்த ஆன்ம – சுழிமுனை அனுபவத்தை சித்திக்கச் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்