ஔவைக் குறள் – விளக்கம் 3
அமுத தாரணை
அமுதத்தின் அவசியமும் பெருமையும்
1. ஈரெண்கலையில் நிறைந்த அமிர்துண்ணில்
பூரணமாகும் பொலிந்து
2 ஓங்காரமான கலசத்து அமிர்துண்ணில்
போங்காலமில்லைப் புரிந்து
3. மேலைஅமிர்தை விளங்காமல் தானுண்ணில்
காலனை வஞ்சிக்கலாம்
விளக்கம் :
சோமசூரியாக்கினிக் கலைகள் கலப்பினால் உண்டாகும் அமிர்தம் பற்றி இக்குறள் பேசுகிறது – இச்சாதனையால் இந்த அமிர்தம் சுழிமுனை வழியாக உடலுக்குள் இறங்கும் – அவ்வாறு இறங்கினால் ஏற்படும் அனுபவங்களைப் பற்றி இக்குறள் விளக்குகின்றது
1. உடல் பொலிவுடன் உறுதியுடன் விளங்கும்
2. என்றும் உடம்போடு உலகினில் இருக்கலாம் – மரணமிலாப் பெருவாழ்வில்
3 மரணிக்காமல் எமனை ஏமாற்றலாம்
வெங்கடேஷ்