ஔவைக் குறள் – 7

ஔவைக் குறள் – 7

குரு வழி

1. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற்றிருக்கும் சிவம்

திரண்ட கருத்து :

ஒரு உண்மையான சத்திய நெறியில் நிற்கும் குரு வந்து வழி காட்டினால் சிவம் நம் எண்ணத்தை விட்டு நீங்காது கலந்து நிற்கும்

2. நல்லன நூல் பல கற்பினும் காண்பரிதே
எல்லையில்லாத சிவம்

திரண்ட கருத்து :

அனேக நூல்கள் – வேத சாஸ்திரங்கள் – உபனிஷத்துகள் – ஆகமங்கள் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாலும் சிவத்தைக் கண்ணால் காண முடியாது

ஏனெனில் , அதற்கு முதலில் தான் யார் என்ற ” ஆன்ம அறிவும் ஆன்ம அனுபவமும் அவசியம் ” – அது இல்லாமல் என்ன தான் கற்றாலும் எப்பொருளும் கற்றாலும் அதனால் ஒரு பயனும் இன்றாம்

3. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித்திருக்கும் சிவம்

திரண்ட கருத்து :

நம் சிந்தை முழுதும் சிவத்தை வியாபித்திருக்கச் செய்ய வேண்டும் – அவ்வாறு செய்தால் தான் சிவம் நம் சிந்தையில் விரும்பி நிறைந்திருக்கும்

நிதர்சன வாழ்க்கையில் – உலக விஷயங்களே நிரம்பி உள்ளதால் – சிவம் நம் எண்ணத்தில் வருவதில்லை – நம் சிந்தையில் நிறைவதில்லை
வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s