திருவருட்பா – இது நல்ல தருணம்
திருவருட்பா – ஆறாம் திருமுறை இது நல்ல தருணம் இது நல்ல தருணம் – அருள்செய்ய இது நல்ல தருணம் 1 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று குதித்த மனம் உருட்டும் குரங்கும் முடங்கிற்று வெறித்த வெவ்வினைகளும் வெந்து குலைந்தது விந்தைசெய் கொடு மாயைச் சந்தையும் கலைந்தது 2. கோபமும் காமமும் குடி கெட்டுப் போயிற்று கொடிய ஓர் ஆங்காரம் பொடிப் பொடி ஆயிற்று தாபமும் சோபமும் தான் தானே சென்றது தத்துவம் எல்லாம் என்வசம் நின்றது…