ஜீவனும் ஆன்மாவும் – 2

ஜீவனும் ஆன்மாவும் – 2

ஒரு கதை

ஒரு மரத்தில் இரு பறவைகள் வாழ்ந்து வந்தன

ஒரு பறவை கீழ் கிளையிலும் மற்றொன்று மேல் கிளையிலும் வாழ்ந்து வந்தன

கீழ் கிளையில் இருப்பது உணவு உண்ணும் , உறங்கும் எல்லாம் செய்யும் – ஆனால் மேலிருப்பதோ அதெல்லாம் செய்யவே செய்யாது – ஏனெனில் அதற்கு தேவையில்லை

கீழ்ப் பறவைக்கு வயதாகிக் கொண்டே போயிற்று – அதனால் முதுமை தளர்ச்சி அடைந்தது – மேல் பறவைக்கு இந்த பாதிப்புக்கள் இல்லை

ஒரு கால கட்டத்தில் கீழ்ப் பறவை இறந்துவிட , மேல் பறவை அந்த மரத்தை விட்டு சென்று விட்டது

இதில்
கீழ்ப் பறவை = ஜீவன்
மேல் பறவை = ஆன்மா

ஒரு சிறிய கதை மூலம் ஜீவன் மற்றும் ஆன்மாவின் தன்மைகளும் குணங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது – இந்தக் கதை உப நிஷதத்தில் உள்ளது

இந்த கதையின் போக்கை மாற்ற முடியும்
ஜீவன் என்ன செய்ய வேண்டும் ??

ஜீவன் ஆன்மாவின் உதவியை நாட வேண்டும் –  ஜீவன்  மேல் நோக்க வேண்டும் – கண்களும் மனமும் பிராணனும் மேல் நோக்க வேண்டும் – அதனால் இறந்த நிலையில் ஆன்மா விழிப்படையும் – ஜீவனுக்கு சகாயம் புரியும் – தன் குணங்களையெல்லாம் ஜீவன் மேல் பிரதிபலிக்கும் – அதனால் ஜீவன் மெள்ள மெள்ள ஆன்மாவாக வாதம் ஆகிவிடும் என்பது உண்மை

இது நடைபெறுவதற்கு இன்னும் சில சூட்சும பயிற்சிகளும் அனுபவங்களும் வர வேண்டும்

இந்த அனுபவம் சித்தித்தால் உணவு உறக்கம் மலஜலம் இல்லா சுத்த தேகம் கிடைக்கும் – அது ஆன்ம தேகம்

ஆன்மாவின் துணை அன்றி ஆன்ம தேகம் என்னும் சுத்த தேகம் கிடைக்காது
வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s