சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??
இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர்
ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை
ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள்
ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில்
1. சுழிமுனை வாசல்
2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம்
3. சுழிமுனை கதவு – அடைப்பு
4. அது திறந்தால் ஆன்ம தரிசனம் – 1008 இதழ்க் கமலம் – வெட்ட வெளி – மௌனம் என்று வெவ்வேறு நாமங்கள் & புனைப் பெயர்கள்
இது தான் வழியும் துறையும் ஆகும்
அதனால் எந்த சித்தர் பாடல் எடுத்தாலும் அதன் பொருள் இதனைச் சுற்றி சுற்றியே அமையும் என்பது உறுதி – அதில் எள்ளளவும் சந்தேகம் தேவை இல்லை
இது ஞானப் பாடல்களுக்கு மட்டும் பொருந்தும்
ஆனால் சித்த மருந்து – கற்பம் – காய கல்பம் – அமுரி – அவர்களின் அந்தரங்க தீக்ஷ விதிகள் – பூஜா விதிகளுக்கு பொருந்தாது –
அந்த பாடல்களுக்கு பொருள் எடுப்பது தவறாக முடியும் – ஆபத்தும் கூட அவர்கள் கூட இருந்து வழி காட்டிக்கொடுத்தால் அந்த முறைகள் வேலை செய்யும்
எனவே சித்தர்களின் ஞானப் பாக்களுக்கு எளிதில் பொருள் எடுக்க முடியும் – முயன்று பாருங்கள்
வெங்கடேஷ்