ஆன்ம அனுபவத்திற்கு ஏங்குதல்
திருவருட்பா – ஆறாம் திருமுறை
ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ
ஊழி தோறும் சென்றிடினும்
என்றும் இங்கிறவா இயற்கை என்றுறுமோ
இயல் அருட்சித்திகள் எனை வந்து
ஒன்றல் என்றுறுமோ அனைத்தும் என் வசத்தே
உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன்
உன் திருவுளமே அறிந்திவ் வனைத்தும்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே
1 ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ = ஒருமை என்னும் ஆன்ம நிலை
2 ஊழி தோறும் சென்றிடினும்
என்றும் இங்கிறவா இயற்கை என்றுறுமோ – என்றும் இறவா ஆன்ம தேகம் எப்போது பெறுவேன் என்று ஏங்குதல்
3 இயல் அருட்சித்திகள் எனை வந்து ஒன்றல் என்றுறுமோ அனைத்தும் என் வசத்தே = ஞான சித்திகள் வகை 647 கோடி தன் வசத்தே என்று ஓங்குமோ என்று ஏங்குகின்றார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்