சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்
சந்தியா வந்தனம் :
ஐயர்கள் தினமும் காலை மாலை இந்த சந்தியா வந்தனம் என்று சொல்லக் கூடிய சடங்கினைச் செய்வர் – இது சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் காணும் நேரத்தில் செய்யப்படுகின்றது
இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அக்கினியாகிய ஆன்ம ஜோதி பிரகாசிக்கும் என்பது தான் இதன் தாத்பரியம்
வடலூர் ஜோதி தரிசனம் :
தைப் பூசத்தின் போது என்ன நடக்கிறது ??
சூரியனும் சந்திரனும் ஓன்றாகக் காட்சி அளிக்கின்ற போது சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது
– இந்த ஜோதி என்பது நெற்றி நடுவே விளங்கும் ஆன்ம ஜோதி ஆகும்
இந்த இரண்டும் ஒன்று தான்
ஐயர்கள் இதனை பயிற்சியில் நடைமுறைப்படுத்தாமல் வெறும் சடங்காக செய்து வருகின்றனர் – ஆனால் வள்ளல் பெருமான் இந்த பயிற்சியை நடைமுறைப்படுத்தி, வெற்றி கண்டு , அதனை உலகிற்கு இந்த அனுபவம் இவ்வாறு இருக்கும் என்று தெரிவித்து விட்டார்
இதில் தான் வள்ளல் தனியாக விளங்குகின்றார்
நிறைய விஷயங்கள் – சன்மார்க்கத்திற்கும் சமய மதத்திற்கும் ஒத்துப் போகின்றது இருக்கின்றன – ஆனால் சன்மார்க்கத்தவர் இதனை ஏற்றுக் கொள்வதே இல்லை – ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை – ஏனெனில் ஆராய்ச்சி என்பதே இல்லை
வெங்கடேஷ்