மனம் எப்போது எங்கு இறக்கும் ??

மனம் எப்போது எங்கு இறக்கும் ??

சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும்
மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே
( தாயுமானவர் )

இதனை தெரிந்து கொள்வதற்கு புராண இதிகாசங்கள் துணை வேண்டும்

இராமாயணத்தில்

இராமன் பாலம் வழியாக கடல் கடந்து இலங்கை அடைந்து இராவணனை கொன்றான் என்பது கதை

பாலம் = நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி
இலங்கை = சுழிமுனை – பிரமரந்திரம்

மனம் இருப்பதுவும் , இருந்து செயல்படும் இடம் சுழிமுனை துவாரம் ஆகும்

மனதை கொல்ல வேண்டும் என்றால் பிரமரந்திரம் அடைய வேண்டும் , அப்போது தான் அது நிறைவேறும் என்பது உறுதி

பயிற்சியில் – எல்லா தீக்களையும் ஒன்றாக்கி  , அதனை சுழிமுனை நாடி வழியாக மேலேற்றி பிரமரந்திரம் அடைந்து அதன் உஷ்ணத்தால் எல்லா திரைகளை எரித்து நாசமாக்கினால் ,எல்லா தத்துவங்களும் எரிந்து ஒழிந்து விடும் – அதனோடு மனமும் இறந்து ஒழிந்து போம்

இது தான் மனதை கொல்லும் பயிற்சி ஆகும்

ஆனால் தற்கால சன்மார்க்கத்தவர் இதிகாச புராணங்கள் எல்லாம் பொய் என்று புறந்தள்ளி விட்டபடியால் , சன்மார்க்க சாதனம் என்றால் என்ன வென்று தெரியாமலே இருக்கின்றனர் – சோறு போடுவது தான் சன்மார்க்கம் – ஜீவகாருண்யம் என்ற நிலையில் சன்மார்க்கத்தை வளர்த்து வருகின்றனர் – இது மிக பரிதாபமான நிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s