உபதேச வினா – 3

Thiru Arutpa – Sixth Canto

உபதேச வினா – 3 
1 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும்
நின்னை விட்டே என்னோடே நிலைப்பாயோ தோழி
நிலையாமல் என்னையும் அலைக்கழிப்பாயோ தோழி ( பாடல் 9 )

என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும் = என் மனதை/ஜீவனை சுழிமுனையில் நிறுத்தி ஆன்மாவின் அழகிய அசைவை நான் காண விழைகின்றேன்

நின்னை விட்டே என்னோடே நிலைப்பாயோ – நிலையாமல் என்னை அலைக்கழிப்பாயோ = என் மனமே என்னுடன் ஒன்றிப் பொருந்துவாயோ இல்லையென்றால் புறத்திலே ஏகுவாயோ என்று வினவுகின்றார்

2 துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில்
ஜோதித் திரு நடம் நான் காணல் வேண்டும்
கரியைக் கண்டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப் பழி பூண்பாயோ தோழி ( பாடல் 10 )

துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதித் திருனடனம் நான் காணல் வேண்டும் – புருவமத்திக்கு மேலும் விளங்கும் துரியாதீதத்தனிப் பெருவெளியில் விளங்கும் ஆன்மாவின் அசைவை நான் காண விழைகின்றேன்

3 தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
சத்தான் திரு நடம் நான் காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி ( பாடல் 11 )

தத்துவத் உட்புறன் தானாம் பொதுவில் சத்தான் திருனடம் நான் காணல் வேண்டும் = 36 தத்துவங்களுக்கு அப்பால் விளங்கும் ஆன்மாவின் அசைவினை நான் காண விழைகின்றேன் – என்னுடன் வந்து உதவி புரிவாயோ – இல்லாமல் புற நோக்கமாகி செல்வாயோ என்று வினவுகின்றார் வள்ளல் பெருமான்

BG VENKATESH

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a comment