வள்ளலார் – உரை நடைப் பகுதி விளக்கம்

வள்ளலார் -உரை நடைப் பகுதி விளக்கம்

வள்ளல் பெருமான் : இங்கு இருக்கும் எதனையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்று உரை நடையில் ஓரிடத்தில் கூறுகின்றார் – அவர் அவ்வாறு கூறக் காரணம் என்ன ??

அவர் நாம் எல்லோருக்கும் கூற வருவது : உலக வாழ்வு என்பது மாய மாரீசன் போன்றது – பின்னாடி செல்ல செல்ல ஓடி ஓடிப் போகும் – அதற்கு முடிவே கிடையாது

அதே போல் உலகத்தில் இருக்கும் பொருட்களும் அவ்வாறே மாயத்தன்மை கொண்டவை – நம்மை இழுத்துக் கொண்டே இருக்கும்

அதே சமயம் ஆன்மாவை நோக்குங்கால் , இந்தப் பொருட்கள் எல்லாம் அற்பமானவை – அநித்தியமானவை – ஒன்றுக்கும் விலைக்கில்லாதவை

அதனால் வள்ளல் நாம் ஆன்மாவை பற்றிவிட்டால், அந்த பொருள் மீது இச்சை வந்துவிட்டால் , இந்த பொருள்கள் எல்லாம் ஒன்றுக்கும் இலாயக்கற்றவை ஆகிவிடும் என்ற அர்தத்தத்தில் இவ்வாறு கூறியிருக்கின்றார்

ஏனெனில் ஆன்மா விற்கு சமானமான ஒரு பொருள் இந்த உலகத்தில் கிடையாது – அதன் பெருமை சொல்லவும் அரிதே – உலகமே ஈடு கொடுத்தாலும் – உலகத்தில் உள்ள எல்லோரின் சொத்துக்களைக் கூட்டிக் கொடுத்தாலும் அந்த ஒரு பொருளுக்கும் சமம் ஆகாது

இந்த அர்தத்திலே தான் இங்கிருக்கும் பொருட்களை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம் என்று வள்ளல் கூறியிருக்கின்றார்

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s