ஓணம் – சன்மார்க்க விளக்கம்

6.5.2014

ஓணம் – சன்மார்க்க விளக்கம்   ( repeat posting – 2mrw being ONAM )

புராணக் கதை :

மகாபலி என்ற ஒரு அரசர் இருந்ததாகவும், வருடத்திற்கு ஒரு முறை , அவர் தான் ஆண்ட நாட்டைப் பார்க்க வருவதாகவும், அவருக்கு அளிக்கும் நல்லதொரு மிகப்பெரிய வரவேற்பு தான் ஓணமாகக் கொண்டாடப் படுகின்றது

முழுக் கதை : மகாபலி, வாமன அவதாரத்தின் போது, ஒரு யாகத்தின் போது, 3 அடி மண்ணை , அவருக்கு தானமாக கொடுத்தார்.அதன் பயனாக, வாமனன் ஓங்கி வளர்ந்து , மகாபலியை, பாதாளத்திற்குள் அடக்கி விடுகின்றார்.

வருடத்திற்கு ஒரு முறை வெளியே வருவதாகவும் , தான் ஆண்ட நாட்டைப் பார்க்க வருவதாகவும் , திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால், இதனை மக்கள் , ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகின்றார்கள்

பெரிய முரண்பாடு யாதெனில் : தெய்வமே அவர் பூமியில் இருக்கத் தேவையில்லை என்று பாதாளத்தில் அடக்கிய பின், எதற்கு . அவ்வளவு பெரிய வரவேற்பு ( பூக்கோலம் ) அளிக்க வேண்டும் ?? நாம் நன்கு சிந்திக்க வேண்டும்

ஓணம் பண்டிகையின் உண்மையான பொருள் :

மனம் தான் மகாபலியாக உருவகப்படுத்தப் பட்டு, அது திருவடியினால் அடக்கி வைக்கப் பட்டு , மனம் எப்போதும் அறிவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மறை பொருளாக சித்தரித்தனர்

மனமானது திருவடியினால் மட்டுமே அடக்க முடியும் என்பதுவும் , அறிவுக்கு கட்டுபட்டு இருக்க வேண்டும் என்பதுவும் தான் ஓணத்தின் உண்மையான தாத்பரியமாகும்

மனமானது அடக்கி வைக்கப்பட்டபின் , வெளியே வருவது மகாபலியுமல்ல, அது மனதுமல்ல, வெளியே வருவது ஆன்மா. அதனால் தான் அதற்கு அவ்வளவு பெரிய வரவேற்பு, பூக்களாலான விரிப்பு என்று அவ்வளவு அமர்க்களம். வருவது ஆன்மா என்று அறியாமல் , மகாபலி என்று அப்பாவி மக்கள் நினைக்கின்றனர்.

ஆன்மாவின் நிறம் மஞ்சளும் வெண்மையும் கலந்தது – இந்த நிறமுடைய ஆடைகளையே அன்று அம்மக்கள் உடுத்தி ஆன்மாவை வரவேற்கின்றனர் – இந்த சூக்குமத்தை அறியாமலே – மகாபலியை வரவேற்பதாகவே கருதுகின்றனர்

ஓணம் என்பது மனம் மீது அறிவின் வெற்றியைக் கொண்டாடும் நாளாகும்.

பெரிய இரகசியங்களையும் , சூக்கும விஷயங்களையும் கதைகளாக நம் மனத்தில் என்றும் நிலைக்கச் செய்தனர் அறிவுடைய முன்னோர். ஆனால் நாம், உட்கருத்தை விட்டுவிட்டு, வெறும் கதைகளாகவே பார்க்கின்றோம் – ரசிக்கின்றோம்.

அதனால் தான் நாம் என்றும் அறியாமை என்னும் இருளிலேயே இருக்கின்றோம் .

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s